வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சப்பட வேண்டாம்! - முதல்வர் ஸ்டாலின்பிரதமர் மோடியே பீதியில் இருக்கிறார்: ராகுல் காந்தி விமர்சனம்பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் ஈரானுக்கு எதிராக ஐ.நா.வில் தீர்மானம்! இந்தியா ஆதரவு! போரை நிறுத்த 3 நிபந்தனைகள் விதித்த ஈரான் அதிபர்! இந்திய ரூபாயின் மதிப்பு மேலும் வீழ்ச்சி! ரூ. 92.37 ஆக சரிவு!தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை! நாள்தோறும் கொலை, பாலியல் வன்கொடுமை! விஜய் கண்டனம்
/

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் 65 கடைகள் மூடல்

ஸ்ரீவில்லிபுத்தூர், ஆண்டாள் கோயிலில் வியாழக்கிழமை 65 கடைகள் மூடப்பட்டன.

News image
Updated On :22 பிப்ரவரி 2018, 8:01 pm

DIN

ஸ்ரீவில்லிபுத்தூர், ஆண்டாள் கோயிலில் வியாழக்கிழமை 65 கடைகள் மூடப்பட்டன.
   மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் அண்மையில் ஏற்பட்ட தீ விபத்தினைத் தொடர்ந்து கோயில்களின் பாதுகாப்பை உறுதிபடுத்துவதற்காக கோயிலின் உள்பகுதி மற்றும் கோயிலை ஒட்டி கோயிலுக்குச் சொந்தமான இடத்தில் உள்ள கடைகளை அப்புறப்படுத்த உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது. 
இதன்படி, ஸ்ரீவில்லிபுத்தூர், ஆண்டாள் கோயிலின் உள்ளேயும் அதனை ஒட்டியுள்ள இடத்திலும் இருந்த 65 கடைகளை வியாழக்கிழமைக்குள் காலி செய்ய கோயில் நிர்வாகம் நோட்டீஸ் கொடுத்திருந்தது.
   இதனையடுத்து வியாழக்கிழமை கடைகள் அனைத்தும் மூடப்பட்டன. கோவில் நிர்வாகம் தரப்பில் மாற்று இடமாக யானை மண்டபத்தில் இடம் தருவதாகவும், அங்கு கடைக்காரர்கள் தங்களது சொந்த செலவில் குறிப்பிட்ட அளவில் கடை அமைத்துக் கொள்ளலாம் என்றும் கூறப்பட்டது. மேலும் உடனடியாக கடையில் உள்ள பொருள்களை காலி செய்து யானை மண்டபத்தில் வைத்துக் கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டது. 
 இது குறித்து கடைகளின் உரிமையாளர்கள் சார்பில் பாரதீய ஜனதா கட்சியின் நிர்வாகி ராஜா கூறியதாவது:
கடைகளை அகற்றுவதால் வியாபாரிகளின் வாழ்வாதாரம் வெகுவாக பாதிக்கப்படும். இது தொடர்பாக உயர்நீதிமன்றத்தில் முறையீடு செய்ய உள்ளோம் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.