விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் காந்தி நகர் மேம்பாலம் அருகே அடிக்கடி ஏற்படும் விபத்துகளைத் தடுக்க அப்பகுதியினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அருப்புக்கோட்டை அருகே மதுரை-தூத்துக்குடி நான்குவழிச்சாலையில் காந்தி நகர் பகுதியில் மேம்பாலம் அமைக்கப்பட்டுள்ளது. இம்மேம்பாலத்திற்கும் அதனையடுத்துள்ள ரயில்வே மேம்பாலத்திற்கும் இடைப்பட்ட சுமார் 400 மீட்டர் நீளச் சாலையில் அடிக்கடி விபத்துகள் ஏற்பட்டு பலர் உயிரிழந்துள்ளனர்.
பாலத்தின் அணுகுச்சாலையிலிருந்து நான்கு வழிச்சாலைக்குச் செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள் உரிய போக்குவரத்து விதிமுறைகளைக் கடைப்பிடிக்காமல் சாலையைக் குறுக்காகக் கடக்கும் போது விபத்துகள் ஏற்படுகின்றன. ஆகவே இருச்சக்கர வாகன ஓட்டிகளுக்கு உரிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதுடன் விபத்துக்களைத் தவிர்க்க இப்பகுதியில் விபத்துப் பகுதி எனும் எச்சரிக்கைப் பலகை அமைக்க வேண்டும். அபாய எச்சரிக்கை ஒளிர்விளக்குக் கம்பங்களையும் அமைக்க வேண்டும் என இப்பகுதியினர் மற்றும் சமூகநல ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

கிழக்கு கடற்கரைப் பகுதியில் மீன்பிடித் தடை காலம் இன்றுமுதல் அமல்
பேருந்து நிலையத்தில் குழந்தையின் தங்கச் சங்கிலி திருட்டு

நாகா்கோவிலில் இன்று பிரதமா் மோடி சாலைப் பேரணி

திருநெல்வேலி மாவட்டத்தில் இதுவரை ரூ.80.87 லட்சம் பறிமுதல்
வீடியோக்கள்

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | ராஜஸ்தானைக் கலங்கடித்த அறிமுக வீரர்: யார் இந்த பிரஃபுல் ஹிங்கே? | Praful Hinge |
தினமணி செய்திச் சேவை
தவெக தேர்தல் வாக்குறுதிகள்! அறிவித்த விஜய்! | Vijay full speech
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | கொல்கத்தாவை வீழ்த்தி வெற்றிநடையைத் தொடருமா சிஎஸ்கே? | CSK vs KKR Match Preview |
தினமணி செய்திச் சேவை

