8 மாதங்களில் 3 படங்கள் மட்டுமே லாபம் ஈட்டியது: ஆர்.கே. செல்வமணி புதிய நாடாளுமன்ற வளாகத்தில் பெருக்கெடுத்த வெள்ளம்! காங்கிரஸ் விமர்சனம் சோழவரம் அருகே ஆளில்லா விமானத்தை இயக்குவதற்கான மையம் அமைக்கப்படும்: சட்டப்பேரவையில் அமைச்சர் கீர்த்தனாஉளுந்தூர்பேட்டையில் பயன்பாட்டில் இல்லாத விமான ஓடுதளத்தை மீண்டும் செயல்படுத்த நடவடிக்கை: அமைச்சர் கீர்த்தனாவீட்டில் இருந்து பணிபுரிவதை ஊக்குவிப்பதற்காக மைக்ரோ டெக் பார்க்: தொழில் துறை அறிவிப்புராமேஸ்வரத்தில் புதிய விமான நிலையம் அமைக்கத் திட்டம்! ஓசூரில் நிச்சயம் வரும் - அமைச்சர் கீர்த்தனா உறுதிடாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 24 காசுகள் உயர்ந்து ரூ. 95.46 ஆக நிறைவு!கச்சா எண்ணெய் விலை சரிவு எதிரொலி: சென்செக்ஸ், நிஃப்டி உயர்வு!

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே மணல் திருட்டு: லாரி, 3 டிராக்டர்கள் பறிமுதல்

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே மணல் திருட்டில் ஈடுபட்ட இருவரை கைது செய்த போலீஸார், லாரி, 3 டிராக்டர்களை  பறிமுதல் செய்தனர்.

Published On :30 ஜனவரி 2024, 10:12 pm IST

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே மணல் திருட்டில் ஈடுபட்ட இருவரை கைது செய்த போலீஸார், லாரி, 3 டிராக்டர்களை  பறிமுதல் செய்தனர்.
    நத்தம்பட்டி காவல் நிலைய சார்பு ஆய்வாளர் சந்தோஷ், புதன்கிழமை இரவு அழகாபுரி அருகே தேசிய நெடுஞ்சாலையில், வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தார். அப்போதுஅவ்வழியாக மணல் ஏற்றி வந்த லாரியை வழிமறித்து போலீஸார் சோதனை நடத்தினர். விசாரணையில் அனுமதியின்றி மணல் ஏற்றி வந்தது தெரிந்தது. போலீஸார் வழக்குப் பதிவு செய்து, லாரியை ஓட்டி வந்த திண்டுக்கல், குருநகர், தர்மர் மகன் பாண்டியராஜா (40) மற்றும் மாற்று ஓட்டுநர் ஸ்ரீரங்கம், சின்ன ஆலம்பட்டியைச் சேர்ந்த ராமசாமி மகன் நாராயணசாமி (29) ஆகியோரை கைது செய்து, லாரியை பறிமுதல் செய்தனர்.
மம்சாபுரம்: மம்சாபுரம், காவல் சார்பு ஆய்வாளர் கந்தகிருஷ்ணன், புதன்கிழமை ராக்காச்சியம்மன்கோயில் ஆற்றுப் பகுதியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தார். அப்போது அவ்வழியாக டிராக்டரை நிறுத்தி நடத்திய சோதனையில், அனுமதியின்றி மணல் ஏற்றி வந்தது தெரிந்தது. இதனையடுத்து போலீஸார் டிராக்டர் உரிமையாளர் ராஜபாளையம், சோமையாபுரத்தைச் சேர்ந்த  பொன்னையா மகன் லிங்கராஜ் மற்றும் ஓட்டுநர் சீத்தாராமன் ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். டிராக்டரை போலீஸார் பறிமுதல் செய்தனர்.
     இதே பகுதியில் மற்றொரு டிராக்டரிலும் போலீஸார் நடத்திய சோதனையில் மணல் திருட்டில் ஈடுபட்டது தெரியவந்தது. இதனையடுத்து போலீஸார் டிராக்டர் உரிமையாளர் சோமையாபுரம் மாரியப்பன் மகன் பால்பாண்டி, ஓட்டுநர் வைரமுத்து ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். டிராக்டரை போலீஸார் பறிமுதல் செய்தனர்.
ஸ்ரீவில்லிபுத்தூர்: ஸ்ரீவில்லிபுத்தூர் நகர் காவல் நிலைய சார்பு ஆய்வாளர் அய்யணன், புதன்கிழமை திருவண்ணாமலை சாலையில் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தார். 
  அப்போது போலீஸாரை கண்டதும் மணல் ஏற்றி வந்த டிராக்டரை நிறுத்திவிட்டு ஓட்டுநர் தப்பினார். அதில் அனுமதியின்றி மணல் திருடி வந்தது தெரியவந்தது. போலீஸார் டிராக்டரை பறிமுதல் செய்து ஓட்டுநரை தேடி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.