ஸ்ரீவில்லிபுத்தூர் அருகேயுள்ள அச்சம்தவிர்த்தான் கிராமத்தில் அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி கிராம மக்கள் செவ்வாய்க்கிழமை தர்னா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஸ்ரீவில்லிபுத்தூர் ஒன்றியம், அச்சம்தவிர்த்தான் ஊராட்சி, வடக்கு அச்சம்தவிர்த்தான் கிராமத்திற்கு தெருவிளக்குகள் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் கோரி அலுவலர்களுக்கு மனு கொடுத்தும் நடவடிக்கை எடுக்கவில்லையாம். இதனையடுத்து ஊராட்சி நிர்வாகத்தை கண்டித்து ஊர் பொதுமக்கள் ஊராட்சி அலுவலகம் முன்பு தர்னா போராட்டம் நடத்தினர். இதனைத் தொடர்ந்து ஊராட்சி அலுவலகத்தில் பொறியாளர்கள் பாலகிருஷ்ணன், மாடசாமி தலைமையில் பேச்சுவார்த்தை நடைபெற்றது.
இதில் கிராமத் தலைவர்கள் சின்னதுரை, கருத்தபாண்டி மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஒன்றியச் செயலாளர் சசிகுமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இதில் அடிப்படை வசதிகள் செய்து தருவதாக அதிகாரிகள் உறுதி அளித்ததை அடுத்து போராட்டம் கைவிடப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஒருநாள் போட்டி: ஆஸ்திரேலியாவை வீழ்த்தி பாகிஸ்தான் அபார வெற்றி!
முதன் முதலில்...
சிரி... சிரி...
வாழ்க்கையின் வழிகாட்டி திருக்குறள்
விடியோக்கள்

”தில்லி பயணத்தில் வெளிப்படை இல்லை?” | அமைச்சர் நிர்மல் குமார் பதில் | TVK

திருக்கணிதப்படி குருபெயர்ச்சி பலன்கள்! June 1 நள்ளிரவு 2 மணி முதல் | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்

ஆர்சிபிக்கு அநீதி?: சொந்த மண்ணில் கோப்பை வெல்லுமா குஜராத்?


