டெட் தேர்வில் தேர்ச்சி பெறுவதற்கு கால அவகாசம் நீட்டிப்பு!பஞ்சாப் உள்ளாட்சித் தேர்தல்: வாக்காளர்களுக்கு கேஜரிவால் நன்றி!தமிழகத்தில் 5 நாள்களுக்குள் பருவமழை தொடங்கும்!27 ஆண்டுகளுக்குப் பின் இன்று இரவு நிகழும் 'புளூ மைக்ரோ மூன்'ஜூன் 1 திருச்சி கிழக்கு தொகுதி மக்களைச் சந்திக்கிறார் முதல்வர் விஜய்! தவெக குதிரை பேரம்: ஆளுநருடன் அதிமுக நிர்வாகிகள் சந்திப்பு!நடிகர் அஜித்குமாரின் தாயார் மோகினி மணி காலமானார் குதிரை பேரம்: தலைமைச் செயலகம் தவெக அலுவலகமாக மாறிவிட்டது! அக்ரி கிருஷ்ணமூர்த்திஅஜித்குமாரைத் தேற்ற என்னிடம் வார்த்தைகள் இல்லை! மு.க. ஸ்டாலின்தவெகவில் குதிரை பேரமா? அமைச்சர் அருண்ராஜ் மறுப்புதங்கம் விலை சவரனுக்கு ரூ. 240 உயர்வு!
/

நியாய விலைக் கடை கட்டடத்தை சீரமைக்கக் கோரிக்கை

சாத்தூர் அருகேயுள்ள ரெங்கப்பநாயக்கன்பட்டி நியாய விலைக் கடை கட்டடத்தை சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Updated On :25 பிப்ரவரி 2019, 7:31 am IST

சாத்தூர் அருகேயுள்ள ரெங்கப்பநாயக்கன்பட்டி நியாய விலைக் கடை கட்டடத்தை சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
       விருதுநகர் மாவட்டம், சாத்தூர் அருகே ரெங்கப்பநாயக்கன்பட்டி கிராமத்தில் சுமார் 200 குடும்பங்கள் உள்ளன. இப் பகுதியில் நியாய விலைக் கடை செயல்பட்டு வந்தது. இந்தக் கட்டடம் கட்டப்பட்டு  15 ஆண்டுகளுக்கும் மேலாவதால் சிதிலமடைந்து, வெளிப்புறச் சுவர்கள் இடிந்து விழுந்து வருகின்றன. 
     எனவே, இங்கிருந்த நியாய விலைக் கடை அருகிலுள்ள ஊராட்சி அலுவலகத்தில் செயல்பட்டு வருகிறது. இடியும் நிலையில் உள்ள நியாய விலைக் கடை கட்டடத்தை சீரமைக்க பொதுமக்கள் பலமுறை கோரிக்கை விடுத்தும், எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. 
     நியாய விலைக் கடை கட்டடத்தின் அருகே கிராம ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியும், அங்கன்வாடி மையமும் உள்ளன. எனவே, குழந்தைகள் ஓடியாடி விளையாடும் இப்பகுதியில் இடிந்து விழுந்து வரும் நியாய விலைக் கடை கட்டடத்தை சீரமைக்கவோ அல்லது அகற்றிவிட்டு புதிய கட்டடம் கட்டவோ நடவடிக்கை எடுக்கவேண்டும் என, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.