அமைச்சராகிறார் ஐயூஎம்எல் ஷாஜகான்! - காதர் மொய்தீன் அறிவிப்புபுதிய அமைச்சர்களுக்கு துறைகள் ஒதுக்கீடு!அமைச்சர் செங்கோட்டையனின் துறை மாற்றம்!மனம் நொந்து அதிமுகவிலிருந்து விலகிவிட்டேன்: தனபால்!சீமான் - கயல்விழிக்கு பெண் குழந்தை! தமிழ்த் தாய் வாழ்த்துக்கு மீண்டும் மூன்றாமிடம்!
/

ஆமணக்குநத்தம் கிராமத்தில் சாலைப் பணியை விரைந்து முடிக்க வலியுறுத்தல்

அருப்புக்கோட்டை அருகே ஆமணக்குநத்தம் கிராமத்தில் நடைபெற்று வரும் சாலை அமைக்கும் பணியை விரைந்து முடிக்க அப்பகுதி மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

Updated On :24 ஜனவரி 2019, 12:50 am IST

அருப்புக்கோட்டை அருகே ஆமணக்குநத்தம் கிராமத்தில் நடைபெற்று வரும் சாலை அமைக்கும் பணியை விரைந்து முடிக்க அப்பகுதி மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
அருப்புக்கோட்டையிலிருந்து சுமார் 8 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது ஆமணக்குநத்தம் கிராமம். இந்த கிராமத்தின் கண்மாயை ஒட்டிச் செல்லும் சாலையில் தடுப்புச்சுவர் அமைத்து சாலையைச் சீரமைக்கும் பணி கடந்த சில மாதங்களாக நடைபெற்று வருகிறது. இதற்காக அச்சாலையில்  ஜல்லிக் கற்களைப் பரப்பி வைத்துள்ளதால் பேருந்துகளும், விவசாய விளைப்பொருள்களை அருப்புக்கோட்டைக்குக் கொண்டு செல்லும் சரக்கு வாகனங்களும் மிகமெதுவாக ஊர்ந்து செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் சைக்கிள் உள்ளிட்ட இருசக்கர வாகனங்கள் கூர்மையான ஜல்லிக்கற்களில் செல்லும்போது அடிக்கடி பழுதாகி நின்றுவிடும் சூழலும் ஏற்படுகிறது. இதில் குறிப்பாக ஆமணக்குநத்தத்தை அடுத்துள்ள  ஆ.கல்லுப்பட்டி, குருந்தமடம் ஆகிய கிராமத்தினர் கூடுதலாக 8 கிலோமீட்டர் வரை சுற்றி மாற்றுவழியில் செல்லும் நெருக்கடியும் ஏற்பட்டுள்ளது. எனவே ஆமணக்குநத்தத்தில் நடைபெறும் சாலை சீரமைப்புப் பணியை விரைந்து முடிக்க அக்கிராமத்தினர் வலியுறுத்தியுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.