கண்களிலும் காதுகளிலும் பொறாமைப் புகை! திமுகவை விமர்சித்த விஜய்!நீட் தேர்வு தேவையில்லை; ரத்து செய்க: முதல்வர் ஜோசப் விஜய்அதிமுகவுடன் கூட்டணியமைக்க தவெக தயாராக இருந்தது: சி.வி. சண்முகம்மே 16-ல் தொடங்குகிறது தென்மேற்கு பருவமழை! வெற்றியின் வீச்சு கொளத்தூரில் பார்த்தும்கூடவா புரியவில்லை? - முதல்வர் விஜய்திமுகவுடன் கூட்டணி; கனவில்கூட வரக்கூடாது: சசிகலா
/

ஓய்வு பெற்ற  காவல் ஆய்வாளருக்கு பிடியாணை

விருதுநகர் நீதிமன்றத்தில் கொலை வழக்கு விசாரணையில் தொடர்ந்து ஆஜராகாமல் இருந்த ஓய்வு பெற்ற

Updated On :23 ஜனவரி 2019, 7:44 am IST

விருதுநகர் நீதிமன்றத்தில் கொலை வழக்கு விசாரணையில் தொடர்ந்து ஆஜராகாமல் இருந்த ஓய்வு பெற்ற காவல் ஆய்வாளருக்கு நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்தது.
   விருதுநகர் அருகே உள்ள நந்திரெட்டியபட்டியைச் சேர்ந்தவர் கூலித் தொழிலாளி ராமு (58). இவரது மனைவி செல்லம்மாள்(52), மகன் ஜெய்கணேஷ் (24). ராமு, மனைவியை சந்தேகப்பட்டு அடிக்கடி தகராறு செய்ததாராம். இந்நிலையில் ராமு கோடரியால் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இது குறித்து ஆமத்தூர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து மனைவி மற்றும் மகனைக் கைது செய்தனர். இது தொடர்பான வழக்கு விசாரணை, விருதுநகரில் உள்ள மாவட்ட கூடுதல் நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வருகிறது. 
   இதில், விசாரணை அதிகாரியான ஓய்வு பெற்ற காவல் ஆய்வாளர் ராமராஜ், பலமுறை நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை. இதனால், அவருக்கு பிடியாணை பிறப்பித்து நீதிபதி எஸ்.டி.பரிமளா செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.