தமிழ்நாடு முதல்வராக விஜய் இன்று பதவியேற்பு! சென்னை: நேரு விளையாட்டரங்கில் பலத்த பாதுகாப்பு!முதல்வா் பதவியேற்பு விழா: 23 இடங்களில் நேரலை ஒளிபரப்புஇன்று 4 மாவட்டங்களுக்கு ‘மஞ்சள்’ எச்சரிக்கை தில்லியில் தீவிரவாத தாக்குதல் அச்சுறுத்தல்! பாதுகாப்பு ஏற்பாடுகள் பன்மடங்கு அதிகரிப்பு!விஜய் பதவியேற்பு விழாவில் பங்கேற்கும் கார்கே, ராகுல் காந்தி! பிளே ஆஃப்புக்கு தகுதி பெறுமா சென்னை சூப்பா் கிங்ஸ்? இன்று லக்னௌவுடன் மோதல்!
/

சிவகாசியில் தீக்குளித்து காயமடைந்த பெண் சாவு

சிவகாசியில் மது குடிப்பதை கணவர் கைவிடாததால் தீக்குளித்த மனைவி செவ்வாய்க்கிழமை இறந்தார்.

Updated On :23 ஜனவரி 2019, 7:40 am IST

சிவகாசியில் மது குடிப்பதை கணவர் கைவிடாததால் தீக்குளித்த மனைவி செவ்வாய்க்கிழமை இறந்தார்.
சிவகாசி சிறுகுளம் காலனிப் பகுதியைச் சேர்ந்தவர் சர்தார். இவரது மனைவி செய்யது அலிபாத்திமா(34). சர்தார் தினசரி மது அருந்திவிட்டு வீட்டிற்கு வந்து மனைவியுடன் தகராறு செய்வாராம். மது அருந்தக்கூடாது என மனைவி மற்றும் உறவினர்கள் கூறியும் சர்தார் மது அருந்துவதை நிறுத்தவில்லை. இதனால் செய்யது அலி பாத்திமா வருத்தத்துடன் இருந்து வந்துள்ளார்.  இந்நிலையில் கடந்த 18 ஆம் தேதி அவர்  தனது உடலில் மண்ணெண்ணெயை ஊற்றி தீவைத்துக் கொண்டாராம். 
சிவகாசி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர் சிகிச்சைப் பலனின்றி செவ்வாய்க்கிழமை உயிரிழந்தார். இது குறித்து சிவகாசி நகர் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.