பெட்ரோல், டீசல் விலை உயர்வைத் திரும்ப பெறுக.! - முதல்வர் விஜய்வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்யும் நடைமுறை தொடக்கம்! முக்கிய மாற்றங்கள்!அக்னி வீரர் பொதுத் தேர்வுக்கான அனுமதி அட்டை வெளியீடு!புதுச்சேரி தற்காலிக பேரவைத் தலைவர் அன்பழகன் முதல்வர் விஜய்யுடன் பிஎம்டபிள்யூ, யமஹா நிறுவன தலைவர்கள் சந்திப்பு!பெட்ரோல், டீசல் விற்பனை வரியை தவெக அரசு குறைக்க வேண்டும்: எடப்பாடி பழனிசாமி!4 ஆண்டுகளுக்கு பின் உயர்ந்த பெட்ரோல், டீசல் விலை! என்னவெல்லாம் விலை உயரும்?இபிஎஸ் அழைத்தால் பேசத் தயார்! எஸ்.பி. வேலுமணிபினராயி விஜயனுடன் கேரள முதல்வர் (தேர்வு) வி.டி. சதீசன் சந்திப்பு!
/

ஜாக்டோ-ஜியோ வேலைநிறுத்தப் போராட்டம்: 336 பள்ளிகள் மூடல்

விருதுநகர் மாவட்டத்தில் ஜாக்டோ- ஜியோ அமைப்பு சார்பில் செவ்வாய்க்கிழமை 8 இடங்களில் வேலை நிறுத்தப்போராட்டம்

Updated On :23 ஜனவரி 2019, 7:43 am IST

விருதுநகர் மாவட்டத்தில் ஜாக்டோ- ஜியோ அமைப்பு சார்பில் செவ்வாய்க்கிழமை 8 இடங்களில் வேலை நிறுத்தப்போராட்டம் நடைபெற்றது. இதன் காரணமாக 336 பள்ளிகள் மூடப்பட்டன. 5,723 பேர் போராட்டத்தில் கலந்து கொண்டனர்.
 2003 ஏப்ரல் மாதத்திற்கு பின் வேலையில் சேர்ந்தவர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டத்தை அமுல்படுத்த வேண்டும். இடை நிலை ஆசிரியர்களுக்கு மத்திய அரசுக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும். முதுநிலை ஆசிரியர்கள், அனைத்து ஆசிரியர்கள், அமைச்சுப் பணியாளர்கள் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் உள்ள ஊழியர்களின் ஊதிய முரண்பாடுகளைக் களைய வேண்டும். சிறப்பு காலமுறை ஊதியம் பெறும் சத்துணவு, அங்கன்வாடி, கிராம உதவியாளர்கள், செவிலியர்கள், பல்நோக்கு மருத்துவமனை பணியாளர்களுக்கு வரையறுக்கப்பட்ட ஊதியம் வேண்டும். 21 மாத ஊதிய மாற்ற நிலுவைத் தொகையை உடனடியாக வழங்க வேண்டும். 3500 தொடக்கப் பள்ளிகளை மேல்நிலை, உயர்நிலைப் பள்ளிகளுடன் இணைக்கும் முடிவைக் கைவிட வேண்டும். அங்கன்வாடி மையங்களில் மழலையர் வகுப்புகளுக்கு (யுகேஜி, எல்கேஜி) மத்திய அரசின் முடிவின் படி புதிய ஆசிரியர்கள் நியமனம் செய்வதற்கு பதில், தொடக்க பள்ளி ஆசிரியர்களை இடமாற்றம் செய்வதை ரத்து செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட 9 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ-ஜியோ அமைப்பு செவ்வாய்க்கிழமை வேலை நிறுத்தப்போராட்டத்தை தொடங்கியது. 
 விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவல வளாகத்தில் நடைபெற்ற இப்போராட்டத்திற்கு அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் ச.இ. கண்ணன் தலைமை வகித்தார். இதில், 180 பெண்கள் உட்பட 310 பேர் கலந்து கொண்டனர்.
 இந்த போராட்டம் காரணமாக விருதுநகர் மாவட்டத்தில் உள்ள 1,501 அரசுப் பள்ளிகளில், 4,313 ஆசிரியர்கள் வராத காரணத்தால் 336 பள்ளிகள் மூடப்பட்டன. அதேபோல், மாவட்டம் முழுவதும் 16,362 அரசு ஊழியர்களில், வருவாய் துறையில் 429 பேர், ஊரக வளர்ச்சி துறையில் 373 பேர், சத்துணவு ஊழியர்கள் 159 பேர், அங்கன்வாடி மையத்தில் 79 பேர், பிற அரசு துறை அலுவலகங்களில் பணி புரியும் 370 பேர் என மாவட்டம் முழுவதும் 5,723 பேர் வேலை நிறுத்த போராட்டத்தில் பங்கேற்றனர். சில பள்ளிகளுக்கு மாணவ, மாணவிகள் வருகை தந்தனர். இதனால், அவர்களை பள்ளியில் இருக்க வைத்து மதிய உணவு வழங்கப்பட்டது. அதேசமயம், பல பள்ளிகளுக்கு வந்த மாணவ, மாணவிகள் ஆசிரியர்கள் இல்லாத காரணத்தால் வீட்டுக்கு திரும்பச் சென்றனர்.
 மாவட்டம் முழுவதும் பெரும்பாலான தொடக்க பள்ளிகளே மூடப்பட்டிருந்தன. அரசு உயர்நிலை, மேல்நிலை பள்ளிகளில் பிற ஆசிரியர்களை கொண்டு பள்ளிகள் இயக்கப்பட்டதாக கல்வி துறை அலுவலர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
சிவகாசி: சிவகாசி -ஸ்ரீவில்லிபுத்தூர் சாலையில் சாட்சியாபுரம் பேருந்து நிறுத்தம் அருகே நடைபெற்ற  ஆர்பாட்டத்திற்கு தமிழ்நாடு அரசு ஊழிர்கள் சங்கத்தின் மாவட்ட துணைத் தலைவர் வைரவன் தலைமை வகித்தார். சிவகாசி வட்டாரத் தலைவர் கருப்பசாமி உள்பட 400 பேர் கலந்து கொண்டனர். போராட்டம் காரணமாக சிவகாசிப் பகுதியில் பள்ளிக்கு ஆசிரியர்கள் செல்லாததால் சிவகாசிப் பகுதியில் தொடக்கப்பள்ளிகள், நடுநிலைப்பள்ளிகள் உள்ளிட்ட 38 பள்ளிகள் மூடப்பட்டிருந்தன. இதனால் பள்ளிக்கு சென்ற மாணவர்கள் வீடு திரும்பினர்.
ஸ்ரீவில்லிபுத்தூர்:  ஸ்ரீவில்லிபுத்தூரில் ஒன்றிய அளவில் 52 பள்ளிகளும், வத்திராயிருப்பு ஒன்றியத்தில் 33 பள்ளிகளும் முழுமையாக மூடப்பட்டு இருந்தன. ஸ்ரீவில்லிபுத்தூரில் வட்டாட்சியர் அலுவலகம், ஒன்றிய அலுவலகம், வனத்துறை அலுவலகம் முழுமையாக இயங்கவில்லை. வத்திராயிருப்பு ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பணியாளர்கள் முழுமையாக வராத காரணத்தால் பணிகள் முடங்கின. வத்திராயிருப்பு, வ.புதுப் பட்டி, சுந்தரபாண்டியம் பேரூராட்சிகள் முழுமையாக இயங்கவில்லை. ஸ்ரீவில்லிபுத்தூர் நகராட்சி அலுவலகம் முன்பு  ஜாக்டோ-ஜியோ சார்பில் தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் கூட்டணி வட்டார தலைவர் பிரகாஷ் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
   ஆர்ப்பாட்டத்தை சாலைப் பணியாளர் சங்க மாநிலச் செயலாளர் ஜி.கோவிந்தன் தொடக்கி வைத்தார். தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி வட்டாரச் செயலர் உத்தண்ட சீனிவாசன், தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் மன்றம் சார்பில் மாவட்டத் தலைவர் சங்கர் கணேஷ், மாவட்டச் செயலாளார் ஜெயகணேஷ் அய்யனார், தமிழ்நாடு முதுகலை பட்டதாரி ஆசிரியர் கழக மாவட்டத் தலைவர் முருகன், இனியவன் தமிழ்நாடு தொடக்க பள்ளி ஆசிரியர் கூட்டணியின் வத்திராயிருப்பு செயலர் ரத்தினம், தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில் கிளைத் தலைவர் முருகன், பாண்டியராசா, குருநாகப்பன், சுந்தரம், கே.கருப்பையா உள்பட சுமார் 300 ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் போராட்டத்தில் கலந்து கொண்டனர்
  சாத்தூர் தாலுகா அலுவலகம் அருகே வட்டார ஒருங்கிணைப்பாளர் ராஜன் தலைமையில் 130 பெண்கள் உள்பட 250 பேர், ராஜபாளையம் நகராட்சி அலுவலகம் அருகே வட்டார ஒருங்கிணைப்பாளர் முருகன் தலைமையில் 150 பெண்கள் உள்பட 300 பேர், வெம்பக் கோட்டை தாலுகா அலுவலகம் அருகே தமிழ்நாடு தொடக்கபள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்டத் தலைவர் திலகராஜ் தலைமையில் 350 பெண்கள் உள்பட 450 பேர், அருப்புக்கோட்டை தாலுகா அலுவலகம் அருகே மாவட்ட இணைச் செயலாளர் செல்வின் தலைமையில் 300 பெண்கள் உள்பட 500 பேர், காரியாபட்டி தாலுகா அலுவலகம் அருகே தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் கிளைச் செயலாளர் சீராளன் தலைமையில் 180 பெண்கள் உள்பட 310 பேர் வேலை நிறுத்த போராட்டத்தில் கலந்து கொண்டனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.