மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு! கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுசிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்!ஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்!தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!சிபிஐ கட்சியிலிருந்து நீக்கப்பட்ட எம்எல்ஏ முகுந்தன் பாஜகவில் இணைவு!மத்திய அரசுப் பள்ளிகளில் 13,000 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன: கல்வித்துறைபோர் காரணமாக 4,335 இந்திய விமானங்கள் ரத்து!கேரளத் தேர்தல்: 47 வேட்பாளர்கள் அடங்கிய பாஜகவின் முதல் பட்டியல் வெளியீடு!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது
/

ஸ்ரீவில்லிபுத்தூரில் ரூ.50 லட்சம் மதிப்பில் அன்னதானக் கூடம் திறப்பு

ஸ்ரீவில்லிபுத்தூரில் ரூ.50 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட அன்னதான கூடத்தை காணொலி காட்சி மூலம் முதலமைச்சர் திறந்து வைத்ததை சட்டமன்ற உறுப்பினர் சந்திரபிரபா குத்து விளக்கேற்றி தொடங்கி வைத்தார்.

News image
அன்னதானக்கூடம் திறப்பு விழாவில் பங்கேற்றவர்கள்
Updated On :14 ஆகஸ்ட் 2020, 10:44 am

DIN

ஸ்ரீவில்லிபுத்தூரில் ரூ.50 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட அன்னதான கூடத்தை காணொலி காட்சி மூலம் முதலமைச்சர் திறந்து வைத்ததை சட்டமன்ற உறுப்பினர் சந்திரபிரபா குத்து விளக்கேற்றி தொடங்கி வைத்தார்.

ஸ்ரீவில்லிபுத்தூரில் பல நூறு ஆண்டு பழமை வாய்ந்த மடவார் வளாகம் வைத்தியநாதசுவாமி திருக்கோவில் உள்ளது. இந்தக் கோவிலுக்கு அறநிலை துறை சார்பில் தினசரி 100 பேருக்கு வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் கரோனா வைரஸ் காரணமாக தற்போது உணவு பொட்டலமாக வருகிறது.  

இக்கோயிலில் புதிதாக அன்னதான கூடம் கட்ட வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். இந்த கோரிக்கையை ஏற்று  50 லட்சம் மதிப்பில் அன்னதான கூடம் கட்டி முடிக்கப்பட்டது. இக்கூடத்தை  முதல்வர் பழனிசாமி காணொலி காட்சி மூலம் திறந்து வைத்ததை அடுத்து  சட்டப்பேரவை உறுப்பினர் சந்திரபிரபா கணபதிபூஜை மற்றும் சிறப்பு பூஜையில் கலந்து கொண்டு குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார்.

நிகழ்ச்சியில் விருதுநகர் உதவி ஆணையர் கணேசன், இலாகா பொறியாளர் ரவிச்சந்திரன்,  சரக ஆய்வாளர் பாண்டியன்,  தக்கார் இளங்கோவன், செயல் அலுவலர்கள்  ஜவகர், கலாராணி, மகேந்திரன், ஒன்றிய செயலாளர்கள் முத்தையா, மயில்சாமி, நகர செயலாளர்  இன்பத்தமிழன்  உட்பட பலர் கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.