மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு! கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுசிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்!ஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்!தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!சிபிஐ கட்சியிலிருந்து நீக்கப்பட்ட எம்எல்ஏ முகுந்தன் பாஜகவில் இணைவு!மத்திய அரசுப் பள்ளிகளில் 13,000 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன: கல்வித்துறைபோர் காரணமாக 4,335 இந்திய விமானங்கள் ரத்து!கேரளத் தேர்தல்: 47 வேட்பாளர்கள் அடங்கிய பாஜகவின் முதல் பட்டியல் வெளியீடு!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது
/

ஸ்ரீவில்லிபுத்தூரில் கயிறு கட்டி நாய்களை 60 அடி ஆழ கிணற்றில் தூக்கிப் போட்ட கொடூரம்

ஸ்ரீவில்லிபுத்தூர், கிணறு ஒன்றில் மூன்று நாய்களை சிலர்  காலில் கயிறு கட்டி கிணற்றுக்குள் வீசியுள்ளனர். சுமார் 15 நாட்களுக்கு பிறகு கிடைத்த தகவலின் பேரில் தீயணைப்பு துறையினர் இரண்டு நாய்களை மீட்டனர்

News image
மீட்கப்பட்ட நாய்கள்
Updated On :17 ஆகஸ்ட் 2020, 1:01 pm

DIN

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே கிணறு ஒன்றில் மூன்று நாய்களை சிலர்  காலில் கயிறு கட்டி கிணற்றுக்குள் வீசியுள்ளனர். சுமார் 15 நாட்களுக்கு பிறகு கிடைத்த தகவலின் பேரில் தீயணைப்பு துறையினர் இரண்டு நாய்களை மீட்டனர்

ஸ்ரீவில்லிபுத்தூர் சிவகாசி செல்லும் சாலையில் நகராட்சிக்கு சொந்தமான குப்பை கிடங்கு உள்ளது. அதன் அருகே சுமார் 60 அடி ஆழத்தில் 20 அடி அகலத்தில் குறைந்த அளவு தண்ணீருடன் கிணறு ஒன்று உள்ளது.

கிணறு இருப்பதே தெரியாத அளவிற்கு சுற்றி முட்புதர்களாக இருக்கும் நிலையில் அந்தக் கிணற்றுக்கு மர்மநபர்கள் மூன்று நாய்களை தூக்கி உள்ளே போட்டு விட்டு சென்று விட்டனர். மேலும் ஒரு நாயை பின்னங்காலை கயிறு கட்டி தூக்கி போட்டுள்ளனர்

தற்செயலாக அந்த பகுதியில் சென்ற ஒருவர் கிணற்றில் நாய்கள் இருப்பதை அறிந்து ஸ்ரீவில்லிபுத்தூர் தீயணைப்புத் துறை அதிகாரி குருசாமி மற்றும் அந்தோணிக்கு  தகவல் கொடுத்தார்.

இதனை தொடர்ந்து ஸ்ரீவில்லிபுத்தூர் தீயணைப்பு துறையினர் விரைந்து சென்று 60 அடி ஆழமுள்ள கிணற்றில் கயிறு கட்டி இறங்கி உள்ளே  பார்த்தபோது பசிக்கொடுமையால் ஒரு நாய் இறந்து கிடந்தது தெரியவந்தது.

மேலும் இரண்டு நாய்கள் எலும்பும் தோலுமாக நிற்கக் கூட முடியாத அளவிற்கு இருந்தன. இதனை தொடர்ந்து  மூன்று நாய்களை மீட்ட தீயணைப்பு துறையினர் இறந்த நாயை புதைத்து விட்டு மற்ற நாய்களுக்கு பிஸ்கட் உட்பட உணவுப் பொருட்கள் வாங்கி கொடுத்தனர்.மேலும் நாய்களை கிணற்றில் தூக்கிப் போட்டது யார் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதுகுறித்து தீயணைப்பு துறை அதிகாரி குருசாமி கூறும் போது,  “மூன்று நாய்களையும் உள்ளே தூக்கிப் போட்டு சுமார் பதினைந்து நாட்கள் இருக்கும்.இவை உள்ளே கிடந்த சிறிதளவு தண்ணீரை குடித்து மட்டும் உயிர் வாழ்ந்துள்ளன. பசி தாங்காமல் ஒரு நாய் இறந்துள்ளது. மீதமுள்ள இரண்டு நாயை உயிருடன் மீட்டு விட்டோம்.” எனத் தெரிவித்தார்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.