குடத்திற்குள் தலை சிக்கிக் கொண்ட ஆடு: போராடி மீட்ட விவசாயிகள்
விவசாயி ஒருவரின் ஆட்டுக்குட்டி நீர் தாகத்தால் தண்ணீர்க் குடத்திற்குள் தலையை விட்டு மாட்டிக்கொண்டதால் அக்குட்டியை போராடி விவசாயிகள் மீட்டனர்.


விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே உள்ள டி.மீனாட்சிபுரத்தில் புதன்கிழமை நீர் குடிக்கக் குடத்திற்குள் தலையை விட்ட ஆட்டுக்குட்டி மாட்டிக்கொண்ட வேடிக்கையான சம்பவம் நடைபெற்றது.
டி.மீனாட்சிபுரத்திலிருந்து நக்கலக்கோட்டை எனும் கிராமத்திற்குச் செல்லும் சாலையோரம் விவசாய நிலத்தருகே புள்ளிமானின் சடலம் கிடப்பதாக வந்த தகவலையடுத்து சம்பவ இடத்திற்கு வத்திராயிருப்பு வேட்டைத் தடுப்புக் காவலர் இராஜேந்திரபிரபு நேரில் வந்து புள்ளிமானின் சடலத்தை மீட்டார். அப்போது அவ்வழியாக தனது ஆட்டுமந்தையை மேய்ச்சலுக்காகக் கொண்டு சென்ற விவசாயி ஒருவரும் இறந்த மானின் சடலத்தை வேடிக்கை பார்க்க நின்று கொண்டிருந்தார்.
அப்போது திடீரென ஒரு ஆட்டுக்குட்டி கத்திய சப்தம் கேட்டு அனைவரும் திரும்பிப் பார்த்தபோது, அங்கு ஒரு ஆட்டுக்குட்டி தனது தலையை தண்ணீர்க் குடத்திற்குள் விட்டு சிக்கிக்கொண்டது தெரிந்தது. உடனே அவ்விவசாயியும் ஒரு இளைஞரும் ஆட்டுக்குட்டியின் தலையிலிருந்து தண்ணீர்க்குடத்தை மீட்க முயற்சித்தனர்.
இதனால் செய்வதறியாது சிலநிமிடங்கள் தவித்த விவசாயி, நீண்ட நேரப் போராட்டத்திற்குப் பின் ஆட்டின் தலையை குடத்தில் இருந்து வெளியே எடுத்தனர்.
அதீத தாகத்தில் வெறும் குடத்திற்குள் நீர் உள்ளதா என தலையை விட்டுப் பார்த்த ஆட்டுக்குட்டி அதில் நீர் இல்லாததாலேயே உயிர்தப்பியது. நீரிருந்திருந்தால் மீட்கமுற்பட்டபோது அது மூச்சுத்திணறி இறந்திருக்கவும் வாய்ப்பிருந்ததென விவசாயி தெரிவித்தார். இச்சம்பவத்தைப் பார்த்த அருகிலிருந்தோர் அனைவரும் சினிமாக்காட்சிபோல நடந்ததை எண்ணி சிரித்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...