மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு! கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுசிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்!ஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்!தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!சிபிஐ கட்சியிலிருந்து நீக்கப்பட்ட எம்எல்ஏ முகுந்தன் பாஜகவில் இணைவு!மத்திய அரசுப் பள்ளிகளில் 13,000 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன: கல்வித்துறைபோர் காரணமாக 4,335 இந்திய விமானங்கள் ரத்து!கேரளத் தேர்தல்: 47 வேட்பாளர்கள் அடங்கிய பாஜகவின் முதல் பட்டியல் வெளியீடு!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது
/

ஸ்ரீவில்லிபுத்தூரில் டாஸ்மாக் பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்

ஸ்ரீவில்லிபுத்தூரில் 14 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி டாஸ்மாக் பணியாளர்கள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. 

News image
Updated On :20 ஆகஸ்ட் 2020, 1:24 pm

DIN

ஸ்ரீவில்லிபுத்தூரில் 14 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி டாஸ்மாக் பணியாளர்கள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. 

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் டாஸ்மாக் பணியாளர் சார்பில் கரோனா தீநுண்மி தொற்று அரசாணை 280-ஐ அமல்படுத்த வேண்டும், கரோனா தொற்று காரணமாக உயிரிழந்த டாஸ்மாக் பணியாளர்களுக்கு 50 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும்,

டாஸ்மாக் பணியாளர்களை பணி நிரந்தரம் செய்து காலமுறை ஊதியம் வழங்க வேண்டும், கேரள மதுபானக்கடை நிர்வாக முறையை டாஸ்மாக்கில் அமல்படுத்த வேண்டும் உள்ளிட்ட 14 அம்ச கோரிக்கை வலியுறுத்தி டாஸ்மாக் ஊழியர்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்திற்கு முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அழகிரிசாமி தலைமை வகித்தார். 

இதில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றிய செயலாளர் வேதநாயகம் மற்றும் தமிழ்நாடு டாஸ்மாக் பணியாளர் சங்கம் ஏஐடியுசி மாவட்ட செயலாளர் ஜெகதீஷ் குமார் எஸ்சி எஸ்டி பேரவைத் தலைவர் ராஜா பேகன் மற்றும் ரமேஷ் உட்பட ஏராளமானோர் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.