மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு! கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுசிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்!ஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்!தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!சிபிஐ கட்சியிலிருந்து நீக்கப்பட்ட எம்எல்ஏ முகுந்தன் பாஜகவில் இணைவு!மத்திய அரசுப் பள்ளிகளில் 13,000 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன: கல்வித்துறைபோர் காரணமாக 4,335 இந்திய விமானங்கள் ரத்து!கேரளத் தேர்தல்: 47 வேட்பாளர்கள் அடங்கிய பாஜகவின் முதல் பட்டியல் வெளியீடு!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது
/

வருமானம் இல்லை: ரயில் முன் பாய்ந்து புகைப்படக் கலைஞர் தற்கொலை          

அருப்புக்கோட்டை அருகே புலியூரான் கிராமத்தைச் சேர்ந்த புகைப்படக் கலைஞர் ரயில்முன் பாய்ந்து தற்கொலை செய்துகொண்டார்.

News image
தற்கொலை செய்த ஜோசப்.
Updated On :22 ஆகஸ்ட் 2020, 2:51 pm

DIN

அருப்புக்கோட்டை அருகே புலியூரான் கிராமத்தைச் சேர்ந்த புகைப்படக் கலைஞர் ரயில்முன் பாய்ந்து தற்கொலை செய்துகொண்டார். இதுதொடர்பாக  சனிக்கிழமை வழக்கு பதிந்த ரயில்வே காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்.

விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை அருகே உள்ள புலியூரான் கிராமத்தைச் சேர்ந்த கனகராஜ் என்பவரது மகன் ஜோசப்(36). புகைப்படக் கலைஞரான இவருக்குத் திருமணமாகி மனைவியும் இரு பெண் குழந்தைகளும் உள்ளனர். இவரது குடும்பம் புலியூரானில் இருந்த நிலையில், அருப்புக்கோட்டை பழைய பேருந்து நிலையமருகே வாடகைக் கடையில் திருமண வீடியோ, புகைப்படம் எடுக்கும் ஸ்டூடியோ வைத்து தொழில் செய்து வந்தாராம். இதனிடையே பல மாதங்களாகத் தொடரும் கரோனா ஊரடங்கு காரணமாகப் புகைப்படக் கலைஞரான இவரது வாழ்வாதாரம் கடுமையாகப் பாதிக்கப்பட்டிருந்ததாம்.

இதனால் அவர் தனது தொழிலுக்குப் பயன்படுத்தி வந்த விலை உயர்ந்த கேமரா, வாகனம் உள்ளிட்டவற்றைப் பணப் பற்றாக்குறையால் அடகு வைத்தாராம். இந்நிலையில் அடகு வைத்த பொருட்களுக்கு பணம் திரும்பக் கட்ட இயலாமலும், வட்டி கட்ட இயலாமலும், மீண்டும் தொழில் செய்ய முடியாமலும் தவித்த ஜோசப், கடும் மனஉளைச்சலில் இருந்து வந்தாராம். இந்நிலையில் வெள்ளிக்கிழமை மாலை புலியூரானில் இருந்த தனது வீட்டிலிருந்து வெளியே சென்று வருவதாகக் கூறிச்சென்றவர் அன்று இரவு முழுவதும் வீடு திரும்பவில்லையாம். 

குடும்பத்தினர் அவரைப் பல இடங்களிலும் தேடி வந்த நிலையில், சனிக்கிழமை நண்பகல் சுமார் 2 மணிக்கு புலியூரான் கிராமமருகே உள்ள  ரயில்வே தண்டவாளத்தில் அடிபட்டு இறந்த நிலையில் அவரை கிராமத்தினர் அடையாளம் கண்டு, திருச்சுழி காவல்துறைக்குத் தகவல் தந்தனராம். அவர்கள் விருதுநகர் ரயில்வே காவல்துறைக்குத் தகவல் தந்ததன்படி, ரயில்வே காவல்துறையினர் நேரில் வந்து ஜோசப்பின் உடலை மீட்டு விசாரணை மேற்கொண்டனர். இதில் முதற்கட்ட தகவலாக புலியூரான் கிராமம் வழியாக வெள்ளிக்கிழமை இரவு 12.30 மணிக்கு வந்த சரக்கு ரயிலில் அடிபட்டு அவர் இறந்தார் என்பதும், அவர் உடல் கிடந்த இடம் சட்டென யாரும் காணமுடியாதபடி, அங்குள்ள பாலத்தின் உச்சியில் கிடந்ததாகவும் தெரிய வந்தது. 

இதனிடையே கரோனா ஊரடங்கால் வாழ்வாதாரம் கடுமையாகப் பாதிக்கப்பட்ட புகைப்படக்கலைஞர் ஜோசப் தற்கொலை செய்து கொண்டது அக்கிராம மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.