மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு! கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுசிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்!ஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்!தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!சிபிஐ கட்சியிலிருந்து நீக்கப்பட்ட எம்எல்ஏ முகுந்தன் பாஜகவில் இணைவு!மத்திய அரசுப் பள்ளிகளில் 13,000 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன: கல்வித்துறைபோர் காரணமாக 4,335 இந்திய விமானங்கள் ரத்து!கேரளத் தேர்தல்: 47 வேட்பாளர்கள் அடங்கிய பாஜகவின் முதல் பட்டியல் வெளியீடு!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது
/

அருப்புக்கோட்டை பகுதிகளில் இடிமின்னலுடன் கன மழை

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை நகர் மற்றும் சுற்றுவட்ட கிராமங்களில் திங்கள்கிழமை மாலை பலத்த இடிமின்னலுடன் கூடிய கன மழை பெய்தது. இதனால் பொதுமக்களும் விவசாயிகளும் மகிழ்ச்சியடைந்தனர்.

News image
பழைய பேருந்துநிலையம் அருகே சாலையோரம் தேங்கிய மழைநீர்
Updated On :31 ஆகஸ்ட் 2020, 1:10 pm

DIN

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை நகர் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் திங்கள்கிழமை மாலை பலத்த இடிமின்னலுடன் கூடிய கன மழை பெய்தது. இதனால் பொதுமக்களும் விவசாயிகளும் மகிழ்ச்சியடைந்தனர்.

அருப்புக்கோட்டை மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில்  கடந்த இரு நாட்களாக பகல்வேளையில் கடும் வெயில் நிலவி வந்தது. இதனிடையே நகர்ப்புறத்திலும், சுற்றுவட்டார கிராமங்களிலும் மாலை சுமார் 4.50 மணி முதல் அரை மணிநேரம் பலத்த இடிமின்னலுடன் கனமழை பெய்தது. மாலை சுமார் 6 மணி வரை தொடர்ந்து மிதமான மழை பெய்தவண்ணம் இருந்தது. இம்மழையால் சாலைகளில் வெள்ளநீர் பெருக்கெடுத்து ஓடியது.

பள்ளமான பகுதிகளில் மழைநீர் வெள்ளம் சூழ்ந்தது. இந்நிலையில்  அருப்புக்கோட்டை மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் சீரான நாட்கள் இடைவெளியில் அடுத்தடுத்து கனமழை பெய்துள்ளதால், நிலத்தடி நீர்மட்டம் வெகுவாக உயர்ந்துள்ளது. இதனால் பொதுமக்களும், ஆழ்துளைக்கிணறு மூலம் நீர்ப்பாசனம் செய்யும் விவசாயிகளும் மகிழ்ச்சியடைந்தனர். திங்கள்கிழமை பெய்த மாலைநேர மழையைத் தொடர்ந்து, இதமான குளிர்ந்த காற்றுடன் கூடிய தட்பவெப்பம் நிலவியது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.