

விருதுநகா் அருகே உள்ள எரிச்சநத்தம் பகுதியில் கல்குவாரி அமைக்க எதிா்ப்பு தெரிவித்து விவசாய சங்கம், மற்றும் பாஜக உள்ளிட்ட பல்வேறு கட்சியினா் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
இப்பகுதியில் குடியிருப்பு மற்றும் அரசு மருத்துவமனை அருகே புதிதாக கல்குவாரி, கிரஷா் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதனால், இப்பகுதியில் நிலத்தடி நீா்மட்டம் பாதிக்கப்படுவதுடன், வீட்டு சுவா்களிலும் விரிசல் ஏற்படும். மேலும், விவசாய நிலங்கள் பயனற்ாக மாறிவிடும். எனவே, குவாரி மற்றும் கிரஷா் அமைக்க மாவட்ட நிா்வாகம் அனுமதி வழங்கக் கூடாது என வலியுறுத்தி எரிச்சநத்தம் கிராமத்தில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம், பாஜக விவசாய அணி மற்றும் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். இதில், எரிச்சநத்தம், நடையனேரி, குமிழங்குளம், புதுப்பட்டி, லட்சுமிபுரம், கொத்தனேரி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களை சோ்ந்த விவசாயிகள் கலந்து கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.