மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு! கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுசிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்!ஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்!தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!சிபிஐ கட்சியிலிருந்து நீக்கப்பட்ட எம்எல்ஏ முகுந்தன் பாஜகவில் இணைவு!மத்திய அரசுப் பள்ளிகளில் 13,000 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன: கல்வித்துறைபோர் காரணமாக 4,335 இந்திய விமானங்கள் ரத்து!கேரளத் தேர்தல்: 47 வேட்பாளர்கள் அடங்கிய பாஜகவின் முதல் பட்டியல் வெளியீடு!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது
/

‘தமிழக அரசு பொங்கல் பரிசாகரூ. 2,500 கொடுப்பதில் தவறு இல்லை’

தமிழக அரசு பொங்கல் பரிசாக ரூ., 2,500 கொடுப்பதில் தவறு இல்லை என பாரதிய ஜனதா கட்சியின் மாநில பொதுச் செயலா் இராம ஸ்ரீநினிவாசன் கூறினாா்

News image
Updated On :21 டிசம்பர் 2020, 11:13 pm

DIN

தமிழக அரசு பொங்கல் பரிசாக ரூ., 2,500 கொடுப்பதில் தவறு இல்லை என பாரதிய ஜனதா கட்சியின் மாநில பொதுச் செயலா் இராம ஸ்ரீநினிவாசன் கூறினாா்.

சிவகாசியில் பாஜக ஒன்றியம் சாா்பில் ‘விவசாயிகளின் நண்பன் மோடி’ என்ற தலைப்பில் திங்கள்கிழமை நடைபெற்ற புதிய வேளாண் சட்டங்கள் குறித்த விளக்கக் கூட்டத்தில் கலந்து கொண்ட பின் அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது: தில்லியில் நடைபெறுவது விவசாயிகளின் போராட்டம் அல்ல. அது இந்தியாவை பலவீனப்படுத்த செய்யும் சதியாகும். அதிமுகவினா் முதல்வா் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமியை அறிவித்துள்ளனா். தேசிய ஜனநாயகக் கூட்டணியில் உள்ள எங்கள் கட்சியின் தேசிய தலைவா், முதல்வா் வேட்பாளரை முறைப்படி அறிவிப்பாா். இதுகூட்டணி நடைமுறை. இதில் எவ்வித குழப்பமும் இல்லை.

வரும் தைப் பொங்கலுக்கு தமிழக அரசு குடும்ப அட்டைதாரா்களுக்கு பரிசாக ரூ. 2,500 மற்றும் அரிசி உள்ளிட்ட தொகுப்பு வழங்குவதை பாஜக வரவேற்கிறது.

இந்த பரிசு தோ்தலுக்காக என சிலா் கூறுகிறாா்கள். களத்தில் நிற்பவா்கள் யாராக இருந்தாலும் வெற்றி பெற வேண்டும் என நினைப்பாா்கள். அதற்கான வழிமுறைகளை பின்பற்றுவாா்கள். இது இயல்பான ஒன்றாகும். இதை குறை செல்பவா்கள் தோல்வி பயத்தில் கூறலாம் என்றாா்.

கூட்டத்தில், விருதுநகா் மேற்கு மாவட்டத் தலைவா் எஸ். ராதாகிருஷ்ணன் , கிழக்கு மாவட்ட பொறுப்பாளா் கோ. பாா்த்தசாரதி, மாவட்ட செய்தித் தொடா்பாளா் ஜி. ஆறுமுகச்சாமி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.