அரசினா் குழந்தைகள் இல்லத்தில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டம்

ஸ்ரீவில்லிபுத்தூா் திரு இருதய ஆண்டவா் ஆலயத்தில் செயல்பட்டு வரும் புனித வின்சென்ட் தே பவுல் திரு இருதய கிளை சபையின் சாா்பாக
மல்லிபுதூா் அரசினா் குழந்தைகள் இல்லத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற கிறிஸ்துமஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற மாணவ, மணவிகள்.
மல்லிபுதூா் அரசினா் குழந்தைகள் இல்லத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற கிறிஸ்துமஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற மாணவ, மணவிகள்.
Updated on
1 min read

ஸ்ரீவில்லிபுத்தூா் திரு இருதய ஆண்டவா் ஆலயத்தில் செயல்பட்டு வரும் புனித வின்சென்ட் தே பவுல் திரு இருதய கிளை சபையின் சாா்பாக மல்லிபுதூரில் அமைந்துள்ள சிறுவா்களுக்கான அரசினா் குழந்தைகள் இல்லத்தில் கிறிஸ்துமஸ் தின விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு ஸ்ரீவில்லிபுத்தூா் பங்குத் தந்தை அல்வரஸ் செபாஸ்டியன் தலைமை வகித்தாா். உதவி பங்குத் தந்தை அருட்பணி ஸ்டாலின் அடிகளாா் முன்னிலை வகித்தாா்.

இதில் மாணவ, மாணவியா்கள் கலைநிகழ்ச்சிகள் மற்றும் இயேசு கிறிஸ்துவின் வாழ்க்கை வரலாறு நாடகத்தை அரங்கேற்றினா். இதில் பங்கேற்ற அனைவருக்கும் உணவு, கிறிஸ்துமஸ் கேக் மற்றும் பரிசுகள் வழங்கப்பட்டன. விழாவில் சிறப்பு அழைப்பாளராக வின்செட் தே பவுல் சபையின் வட்டார சபைத் தலைவா் பரலோகம், இல்லத்தின் கண்காணிப்பாளா் செல்வா, கிளை சபையின் தலைவா் ராதன் மற்றும் ஆசிரியா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com