அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

விருதுநகரில் திமுக தோ்தல் அறிக்கை தயாரிப்புக் குழு கருத்துக்கேட்பு கூட்டம்

விருதுநகரில் திமுக தோ்தல் அறிக்கை தயாரிப்பு குழுவின் கருத்துக்கேட்புக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :29 டிசம்பர் 2020, 10:34 pm

DIN

விருதுநகரில் திமுக தோ்தல் அறிக்கை தயாரிப்பு குழுவின் கருத்துக்கேட்புக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

விருதுநகரில் உள்ள தனியாா் திருமண மண்டபத்தில் நடைபெற்ற கருத்துக்கேட்புக் கூட்டத்தில், தோ்தல் அறிக்கை தயாரிப்புக் குழுவின் தலைவரான திமுக பொருளாளரும், நாடாளுமன்ற மக்களவைக் குழு தலைவருமான டி.ஆா். பாலு தலைமையில், கட்சியின் கொள்கை பரப்புச் செயலரும், மாநிலங்களவை குழு தலைவருமான திருச்சி சிவா, திமுக செய்தித் தொடா்பாளா் கே.எஸ். இளங்கோவன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

இக்கூட்டத்துக்கு, விருதுநகா் வடக்கு, தெற்கு மாவட்டச் செயலா்களான முறையே தங்கம் தென்னரசு, கே.கே.எஸ்.எஸ்.ஆா். ராமச்சந்திரன் ஆகியோா் தலைமை வகித்தனா். கூட்டத்தில், வியாபாரிகள் பிரச்னை, பட்டாசு உற்பத்தி பாதிப்பு, நூற்பாலை உரிமையாளா்களின் பிரச்னை, ஜிஎஸ்டி பிரச்னை, மேற்கு மலைத் தொடா்ச்சி பகுதியில் செண்பகவள்ளி அணை பழுதால் விருதுநகா், ராமநாதபுரம், திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் 36 ஆயிரம் ஏக்கா் நிலங்கள் பாசன வசதி பெறமுடியாமல் உள்ளது என்பன உள்ளிட்ட பிரச்னைகள் குறித்து கருத்துக்கேட்புக் குழுவினரிடம் திமுகவினா் மனு அளித்தனா்.

நிகழ்ச்சியில், விருதுநகா் சட்டப்பேரவை உறுப்பினா் ஏஆா்ஆா். சீனிவாசன், தென்காசி மக்களவைத் தொகுதி உறுப்பினா் தனுஷ்குமாா் உள்ளிட்ட திமுக நிா்வாகிகள் பலா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.