ஸ்ரீவில்லிபுத்தூரில் விவசாய சங்கம் சார்பில் கருப்புக்கொடி ஆர்ப்பாட்டம்.
ஸ்ரீவில்லிபுத்தூரில் விவசாய சங்கம் சார்பில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகம் முன்பு திங்கள்கிழமை கருப்புக்கொடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.


விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூரில் விவசாய சங்கம் சார்பில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகம் முன்பு திங்கள்கிழமை கருப்புக்கொடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டத்திற்கு விவசாய சங்க நிர்வாகி தங்கக் கொடி தலைமை வகித்தார். கோரிக்கைகளை விளக்கி அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கத்தின் மாவட்ட பொருளாளர் ஜோதிலட்சுமி பேசினார். மார்க்சிஸ்ட் கம்யூணிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் அர்ச்சுனன் ஆர்ப்பாட்டத்தை வாழ்த்தி பேசினார்.
மின்சார சட்டம் 2020 ஐ ரத்து செய்ய வேண்டும்.
கரோனா நிவராணம் அனைத்து விவசாயிகளுக்கும் வழங்க வேண்டும். 100 நாள் வேலையை 200 நாட்களாக அதிகப்படுத்த வேண்டும். கரோனா பரிசோதனையை அதிக படுத்த வேண்டும் என்பன உள்ளிட் கோரிக்கையை வலியுறுத்தி கருப்புக்கொடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்தில் சிபிஎம் மாவட்ட குழு உறுப்பினர் திருமலை,சிபிஎம் நகரச் செயலாளர் ஜெயக்குமார், மற்றும் விவசாய சங்கத்தினர் கலந்து கொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...