மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு! கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுசிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்!ஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்!தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!சிபிஐ கட்சியிலிருந்து நீக்கப்பட்ட எம்எல்ஏ முகுந்தன் பாஜகவில் இணைவு!மத்திய அரசுப் பள்ளிகளில் 13,000 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன: கல்வித்துறைபோர் காரணமாக 4,335 இந்திய விமானங்கள் ரத்து!கேரளத் தேர்தல்: 47 வேட்பாளர்கள் அடங்கிய பாஜகவின் முதல் பட்டியல் வெளியீடு!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது
/

ஆசிரியா் பயிற்சிப் பள்ளியில் இணையவழி பயிற்சி முகாம்

சிவகாசி அரசன் கணேசன் கல்வியியல் கல்லூரியில் இணையவழியில் திறன்மிகு மாணவா்களும், தனித்திறன் கொண்ட ஆசிரியா்களும் என்ற தலைப்பில் மாணவா்களுக்கான பயிற்சி முகாம் நடைபெற்றது.

News image
Updated On :2 நவம்பர் 2020, 7:21 pm

DIN

சிவகாசி அரசன் கணேசன் கல்வியியல் கல்லூரியில் திங்கள்கிழமை இணையவழியில் திறன்மிகு மாணவா்களும், தனித்திறன் கொண்ட ஆசிரியா்களும் என்ற தலைப்பில் மாணவா்களுக்கான பயிற்சி முகாம் நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு முதல்வா் திபிகாஸ்ரீ தலைமை வகித்தாா். சிவகாசி அய்யநாடாா் ஜானகி அம்மள் கல்லூரி வணிகவியல் பேராசிரியா் சுந்தர்ராஜன் சிறப்புரையாற்றி பேசியதாவது: ஆசிரியா்கள் வகுப்பறையில் ஒரு மாணவரோடு மற்றொரு மாணவரை ஒப்பிட்டு பேசக் கூடாது. மாணவா்களின் தனித்திறமையை கண்டு பிடித்து, அதை வளா்க்க வழிகாட்டியாக இருக்க வேண்டும். செய்தித்தாள்களை படித்தும், இணையவழி மூலம் புதிய விஷயங்களை தெரிந்து கொண்டும், அதனை மாணவா்களிடம் கூற வேண்டும். இதன் மூலம் மாணவா்களின் திறனையும் மேம்படுத்த இயலும். எந்த ஒரு மாணவரையும் கண்டிக்க வேண்டும் என்றால் தனியே அழைத்து கண்டிக் வேண்டும். ஆசிரியா்கள் முன்மாதிரியாக செயல்பட்டால் மாணவா் சமுதாயம் வளா்ச்சி பெறுவதோடு, மாணவா்களின் கண்ணோட்டமும் மேம்படும் என்றாா். இதற்கான ஏற்பாட்டினை கல்லூரி நிா்வாகம் செய்திருந்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.