மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு! கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுசிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்!ஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்!தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!சிபிஐ கட்சியிலிருந்து நீக்கப்பட்ட எம்எல்ஏ முகுந்தன் பாஜகவில் இணைவு!மத்திய அரசுப் பள்ளிகளில் 13,000 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன: கல்வித்துறைபோர் காரணமாக 4,335 இந்திய விமானங்கள் ரத்து!கேரளத் தேர்தல்: 47 வேட்பாளர்கள் அடங்கிய பாஜகவின் முதல் பட்டியல் வெளியீடு!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது
/

தொடர்ந்து 3 நாட்கள் கனமழை: கண்மாய்க்கு நீர்வரத்து இல்லாததால் விவசாயிகள் வேதனை

அருப்புக்கோட்டையில் தொடர்ந்து 3 நாட்கள் கனமழைக்குப் பின்னரும் பெரிய கண்மாயில் குறைந்த அளவு நீர்வரத்தே ஏற்பட்டுள்ளது.

News image
நீர் வரத்தின்றி காணப்படும் பெரியகண்மாய்
Updated On :2 செப்டம்பர் 2020, 1:10 pm

DIN

அருப்புக்கோட்டையில் தொடர்ந்து 3 நாட்கள் கனமழைக்குப் பின்னரும் பெரிய கண்மாயில் குறைந்த அளவு நீர்வரத்தே ஏற்பட்டுள்ளது.

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் தொடர்ந்து கடந்த 3 நாட்களாகப் பெய்த கனமழைக்குப் பின்னரும் பெரியகண்மாய்க்கு நீர்வரத்து இல்லாததால், அக்கண்மாய் நீரை நம்பி பாசனம் செய்யும் விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர்.

அருப்புக்கோட்டை மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் தொடர்ந்து கடந்த 3 நாட்களாகக் கனமழை பெய்துள்ளது. இருப்பினும் பெரியகண்மாய்க்குக் குறைந்த அளவே நீர்வரத்து ஏற்பட்டுள்ளது. இக்கண்மாயின் சுற்றுவட்டாப் பகுதிகளில் உள்ள சுக்கிலநத்தம், வடுகர்கோட்டை, ராமசாமிபுரம், கஞ்சநாயக்கன்பட்டி ஆகிய கிராமங்கள் உள்ளிட்ட அருப்புக்கோட்டையைச் சேர்ந்த 100 ஏக்கரைச் சேர்ந்த விவசாயிகள் இக்கண்மாய் நீரை நம்பியே பாசனம் செய்து வருகின்றனர்.

ஆனால் கடந்த சில ஆண்டுகளில் இந்த ஆண்டுதான் இப்பருவத்தில் நல்ல மழை பெய்து வருகிறது. ஆனால் மழை நீரை அறுவடை செய்யும்விதமாக , வரத்துக் கால்வாய்களைத் தூர்வாறிப் பலஆண்டுகளாகி விட்டதால், அனைத்து மழைநீர் வரத்துக் கால்வாய்களும் புதர்ச்செடிகள் அடர்ந்தும், குப்பைகள் அடைத்தும் காணப்படுகின்றன.

இதனால் கண்மாய்க்கு வரும் பெரும்பகுதி நீரை இப்புதர்ச்செடிகள் உறிஞ்சியும் தடுத்தும் விடுவதாக விவசாயிகள் புகார் தெரிவிக்கின்றனர். இதனை முன்னரே அறிந்து வரத்துக் கால்வாய்களைத் தூர்வாற விவசாயிகள் ஊராட்சி, நகராட்சி நிர்வாகங்களிடம் பலமுறை கோரிக்கை வைத்தும் நடவடிக்கை இல்லையெனவும் அவர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.

ஆகவே மழைநீர் வரத்துக் கால்வாய்களைத் தூர்வார மாவட்ட நிர்வாகம் துரித நடவடிக்கை எடுக்கவேண்டுமென பெரியகண்மாய் சுற்றுவட்டார விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.