வேளாண்மை உதவிப்பேராசிரியர் வேணுதேவன், தானம் அறக்கட்டளை மற்றும் திருச்சுழி வட்டார கண்மாய் வயலக கூட்டமைப்பினர் முன்னிலை வகித்தனர். அப்போது மதுரை வேளாண்மைக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலைய 4ஆம் ஆண்டு மாணவிகளான கார்த்திகா, கெüசல்யா, லட்சுமி, மகாலட்சுமி, நந்தினி மற்றும் நஸ்ரத் ஆகியோர் நேரில் களத்தில் மரங்களை நட்டதுடன், நிகழ்ச்சியில் கலந்துகொண்ட சுமார் 25க்கு மேற்பட்ட முன்னோடி பெண் விவசாயிகளிடையே மரங்களின் பயன்கள் குறித்து எடுத்துக் கூறி புங்கை மரம், நாவல் மரம், அரச மரம் உள்ளிட்ட பலவகை மரங்களை நடுவதன் மூலம் மண் அரிப்பைத் தடுத்து மண்வளம் காப்பதன் மூலம் நிழலும், மழையும் பெறலாம் என விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.