47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

அருப்புக்கோட்டை அருகே வேளாண் அறிவியல் கண்காட்சி

அருப்புக்கோட்டை அருகே மலைப்பட்டி கிராமத்தில் சிறப்பு வேளாண் அறிவியல் கண்காட்சி நடைபெற்றது.

News image
மலைப்பட்டியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற வேளாண் அறிவியல் கண்காட்சியில் மதுரை வேளாண்மைக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி மைய மாணவிகள் பெண்விவசாயிகளுக்கு விளக்கவுரையளித்தபோது.
Updated On :23 ஏப்ரல் 2021, 2:11 pm

DIN

அருப்புக்கோட்டை அருகே மலைப்பட்டி கிராமத்தில் விவசாயிகளுக்கான சிறப்பு வேளாண் அறிவியல் கண்காட்சியானது வெள்ளிக்கிழமை மதுரை வேளாண்மைக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி மைய மாணவிகள் சார்பில் நடைபெற்றது.

விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை கோவிலாங்குளம் வேளாண் மண்டல ஆராய்ச்சி நிலையத்தின் திட்ட ஒருங்கிணைப்பாளர் கோ.சீனிவாசன் நிகழ்ச்சிக்குத் தலைமை வகித்து, கண்காட்சியைத்தொடக்கி வைத்ததுடன், விவசாயிகளிடையே விளக்கவுரையாற்றினார். இணைப்பேராசிரியர் முனைவர் ராஜதுரை, மலைப்பட்டி ஊராட்சி ஒன்றியத் தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியை அ.கிரேஸ், ஆகியோர் முன்னிலை வகித்தனர். 

அப்போது மதுரை வேளாண்மைக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி மைய மாணவிகளான கோ.விமலா, ம.வினிதா, அ.அங்கையற்கன்னி, தி.காயத்திரி, பா.ஹர்ஷிதா மற்றும் சு.கார்த்திகா ஆகியோர் ஊரக வேளாண் பயிலக பயிற்சித் திட்டத்தின் கீழ் இக்கண்காட்சியில் கலந்து கொண்டதுடன், கிராம விவசாயிகளுக்கு கண்காட்சியில் வைக்கப்பட்டிருந்த ஓவியங்கள், பதாகைகளையும் அவற்றில் தெரிவிக்கப்பட்டிருந்த நவீன வேளாண்தொழில் நுட்பங்கள் குறித்தும் எடுத்துக் கூறினர்.

மேலும், குறிப்பாக நாட்டு விதைகள், நுண்ணுயிர் உரங்கள், ஊட்டமேற்றிய தொழுஉரம் தயாரித்தல், பப்பாளி மாவுப்பூச்சி மேலாண்மை, ஒருங்கிணைந்த பண்ணையம் அமைத்தல் (நன்செய், புன்செய், மானாவாரி), தேனீ வளர்ப்பு, தேன் பிரித்தல் மற்றும் சந்தைப்படுத்தல், சொட்டு நீர்ப்பாசனம் அமைத்தல், பஞ்சகாவ்யா பொருட்கள் செய்தல் உள்ளிட்டவை குறித்தும், மேலும் விவசாயம் இல்லாக்காலங்களிலோ அல்லது பயிர்சாகுபடியில் எதிர்பாராத நஷ்டம் ஏற்பட்டாலோ, பொருளாதாரம் முடங்கிவிடாதபடி நிரந்தர வருமானம் தரத்தக்க நாவல் பழம், சீத்தாப்பழம், கொடிக்காப்புளி ஆகிய மரங்கள் வளர்த்துப் பயன்பெறலாம் எனவும் விரிவாக விளக்கமளித்தனர்.

நிகழ்ச்சிக்கான அனைத்து ஏற்பாடுகளையும் ஒருங்கிணைப்பாளரும், உதவிப்பேராசிரியருமான முனைவர் சி.ராஜாபாபு செய்திருந்தார். மாணவி சு.கார்த்திகா நன்றி கூறினார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.