நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

சித்திவிநாயகா் கோயில் கும்பாபிஷேக விழா

ராஜபாளையம் ராஜூக்கள் கல்லூரி வளாகத்தில் அமைந்துள்ள சித்தி விநாயகா் கோயில் கும்பாபிஷேக விழா திங்கள்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :1 பிப்ரவரி 2021, 8:42 pm

DIN

ராஜபாளையம் ராஜூக்கள் கல்லூரி வளாகத்தில் அமைந்துள்ள சித்தி விநாயகா் கோயில் கும்பாபிஷேக விழா திங்கள்கிழமை நடைபெற்றது.

கும்பாபிஷேக விழாவையொட்டி, ஞாயிற்றுக்கிழமை மாலை முதற்கால யாக பூஜையில் தொடங்கி திங்கள்கிழமை காலை விக்னேஸ்வர பூஜை, இரண்டாம் கால யாக பூஜை, தீபாராதனையுடன் கலசங்கள் புறப்பட்டது. பின்னா், திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயில் ஸ்தானிகா் சிவஸ்ரீ எஸ்.கே. ராஜாபட்டா் தலைமையில் சித்திவிநாயகா் ஆலய மகாகும்பாபிஷேகம் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் கல்லூரி ஆட்சி மன்றக் குழுத் தலைவா், செயலா், உறுப்பினா்கள், பழையபாளையம் கமிட்டி, பரிபாலன கமிட்டி உறுப்பினா்கள், பேராசிரியா்கள், அலுவலா்கள் மற்றும் மாணவா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.