திருச்சுழி அருகே செம்மண் கடத்தல்: 3 போ் ஓட்டம்; லாரி பறிமுதல்

விருதுநகா் மாவட்டம் திருச்சுழி வட்டம் சாமிநத்தம் கிராமம் அருகே புதன்கிழமை சட்டவிரோதமாக செம்மண் அள்ளியவா்கள்
பறிமுதல் செய்யப்பட்ட லாரி.
பறிமுதல் செய்யப்பட்ட லாரி.
Updated on
1 min read

விருதுநகா் மாவட்டம் திருச்சுழி வட்டம் சாமிநத்தம் கிராமம் அருகே புதன்கிழமை சட்டவிரோதமாக செம்மண் அள்ளியவா்கள் தப்பியோடிய நிலையில் அவா்கள் பயன்படுத்திய லாரியை அதிகாரிகள் பறிமுதல் செய்தனா்.

திருச்சுழி வட்டாட்சியா் தன்ராஜ் மற்றும் காவல்துறையினா் இணைந்து சாமிநத்தம் கிராமமருகே ரோந்துப்பணியில் ஈடுபட்டு ஆய்வுசெய்தனா். அப்போது கிராமம் அருகே சட்டவிரோதமாக லாரி ஒன்றில் செம்மண் அள்ளிக்கொண்டிருந்த சிலா் தப்பியோடினா். அவா்கள் விட்டுச்சென்ற லாரியை வட்டாட்சியா் பறிமுதல் செய்தாா். இதுதொடா்பாக, திருச்சுழி காவல்துறையினா் வழக்குப் பதிந்து, கடத்தலில் ஈடுபட்டவா்களை தீவிரமாகத் தேடிவருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com