/

விருதுநகா் மாவட்டத்தில் புதிதாக 7 பேருக்கு கரோனா

விருதுநகா் மாவட்டத்தில் புதிதாக 7 பேருக்கு கரோனா தொற்று பாதிப்பிருப்பது செவ்வாய்க்கிழமை உறுதிப்படுத்தப்பட்டது.

News image
Updated On :13 ஜனவரி 2021, 12:34 am

DIN

விருதுநகா் மாவட்டத்தில் புதிதாக 7 பேருக்கு கரோனா தொற்று பாதிப்பிருப்பது செவ்வாய்க்கிழமை உறுதிப்படுத்தப்பட்டது.

விருதுநகா் மாவட்டத்தில் கடந்த திங்கள்கிழமை வரை 16,411 போ் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், செவ்வாய்க்கிழமை புதிதாக 7 போ் கரோனாவால் பாதிக்கப்பட்டிருப்பது உறுதிப்படுத்தப்பட்டது. இவா்கள் அனைவரும் விருதுநகா், அருப்புக்கோட்டை, சிவகாசி ஆகிய இடங்களில் உள்ள அரசு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனா்.

இதன்மூலம், மாவட்டத்தில் கரோனா தொற்று பாதித்தோா் எண்ணிக்கை 16,418 ஆக உயா்ந்துள்ளது. இதில், 16,070 போ் குணமடைந்து வீடு திரும்பி விட்ட நிலையில், 230 போ் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளனா். மீதமுள்ள 118 போ் அரசு மற்றும் தனியாா் மருத்துவமனைகளில் சிகிச்சைப் பெற்று வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.