அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

அருப்புக்கோட்டையில் பொதுமக்களிடம் தடுப்பூசி விழிப்புணர்வை ஏற்படுத்திய முதல்வர் ஸ்டாலின்

அருப்புக்கோட்டையில் சனிக்கிழமை பொதுமக்களை நேரில் சந்தித்த முதல்வர் மு.க.ஸ்டாலின், அம்மக்களிடம் நலம் விசாரித்து, கரோனா தடுப்பூசியின் முக்கியத்துவம் குறித்து எடுத்துக்கூறி விழிப்புணர்வையும்

News image
அருப்புக்கோட்டையில் பொதுமக்களிடம் தடுப்பூசி விழிப்புணர்வை ஏற்படுத்திய முதல்வர் ஸ்டாலின்.
Updated On :30 அக்டோபர் 2021, 8:27 am

DIN

அருப்புக்கோட்டையில் சனிக்கிழமை பொதுமக்களை நேரில் சந்தித்த முதல்வர் மு.க.ஸ்டாலின், அம்மக்களிடம் நலம் விசாரித்து, கரோனா தடுப்பூசியின் முக்கியத்துவம் குறித்து எடுத்துக்கூறி விழிப்புணர்வையும் ஏற்படுத்தினார். 

பசும்பொன் தேவர் நினைவிடத்தில் 30.10.2021 சனிக்கிழமை குருபூஜை விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் கலந்து கொண்டார். பின்னர், திரும்பும் வழியில் அவர் அருப்புக்கோட்டை காந்தி நகர் தனியார் மண்டபத்தில் நடைபெற்ற கரோனா தடுப்பூசி முகாமை நேரில் பார்வையிட்டார்.

உடன் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட வருவாய்த்துறை மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.இராமச்சந்திரன், தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, மாவட்ட ஆட்சியர் மேகநாத ரெட்டி ஆகியோரிடம் தடுப்பூசியின் முதல் தவணை, 2ம் தவணைகளை செலுத்திக் கொண்டோர் சதவீதம் குறித்தும், தடுப்பூசி தொடர்பான விஷயங்கள் குறித்தும் ஆய்வு செய்து விளக்கம் கேட்டார். 

அப்போது, முகாமில் தடுப்பூசி செலுத்திக்கொண்ட கஞ்சநாயக்கன்பட்டி திமுக நிர்வாகிகளில் ஒருவரான சீனிவாசனிடமும் நலம் விசாரித்தார். முன்னதாக, தடுப்பூசி முகாமை ஆய்வுசெய்யும் முன்னர், அம்மண்டபம் அருகே நின்றுகொண்டிருந்த பொதுமக்களை நேரில் சந்தித்து நலம் விசாரித்த முதல்வர் மு.க.ஸ்டாலின், கரோனா தடுப்பூசியின் முக்கியத்துவம் குறித்தும் எடுத்துக்கூறி பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்திப் பேசினார். 

உடன் இந்நிகழ்ச்சியில், மாவட்ட திமுக இளைஞரணி அமைப்பாளர் ரமேஷ், முன்னாள் நகர் மன்றத் தலைவர் சிவப்பிரகாசம், முன்னாள் ஒன்றியக்குழுத்தலைவர் சுப்பாராஜ், கஞ்சநாயக்கன்பட்டி திமுக நிர்வாகிகள் சீனிவாசன், அழகுராமானுஜம், ஒன்றிய நிர்வாகிகள் பொன்ராஜ், பாலகணேசன் உள்ளிட்டோரும், திரளான தொண்டர்களும் நேரில் கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.