மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு! கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுசிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்!ஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்!தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!சிபிஐ கட்சியிலிருந்து நீக்கப்பட்ட எம்எல்ஏ முகுந்தன் பாஜகவில் இணைவு!மத்திய அரசுப் பள்ளிகளில் 13,000 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன: கல்வித்துறைபோர் காரணமாக 4,335 இந்திய விமானங்கள் ரத்து!கேரளத் தேர்தல்: 47 வேட்பாளர்கள் அடங்கிய பாஜகவின் முதல் பட்டியல் வெளியீடு!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது
/

கருநாகப்பாம்பை கழுத்தில் மாலையாக அணிந்து கொண்ட ஸ்ரீவில்லிபுத்தூர் ஜீயர் சுவாமிகள்

ஸ்ரீவில்லிபுத்தூர் மணவாள மாமுனிகள் மடத்தின் 24 வது பட்டம் ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ சடகோப ராமானுஜ ஜீயர்  சுவாமிகள் நாகப்பாம்பை கழுத்தில் மாலையாக அணிந்து கொண்டார்.

News image
கருநாகப்பாம்பை கழுத்தில் மாலையாக அணிந்து கொண்ட ஸ்ரீவில்லிபுத்தூர் ஜீயர் சுவாமிகள்
Updated On :21 செப்டம்பர் 2021, 4:40 am

DIN

ஸ்ரீவில்லிபுத்தூர்: ஸ்ரீவில்லிபுத்தூர் மணவாள மாமுனிகள் மடத்தின் 24 வது பட்டம் ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ சடகோப ராமானுஜ ஜீயர்  சுவாமிகள் நாகப்பாம்பை கழுத்தில் மாலையாக அணிந்து கொண்டார்.

இந்திய நாட்டில் சாதுக்களும், சனந்நியாசிகளும் ஆண்டு தோறும்  தங்களது குருமார்களுக்கு நன்றி தெரிவிக்கவும், தங்களது ஆன்மீக பலத்தை பெருக்கிக் கொள்ளவும் சாதுர்மாஸ்ய விரதம் இருப்பது வழக்கம். இவ்விரத நாள்களின் போது சந்நியாசிகள் ஏதேனும் ஒரு இடத்தில் தங்கி விரதத்தை அனுஷ்டித்து வருவார்கள். 

அந்த வகையில் ஸ்ரீவில்லிபுத்தூர் மணவாள மாமுனிகள் மடத்தின் 24 வது பட்டம் ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ சடகோப ராமானுஜ ஜீயர் சுவாமிகள் இந்த விரதத்தினை உத்தரப்பிரதேச மாநிலம் நைமிசாரண்யம் என்ற இயற்கை எழில் கொஞ்சும் இடத்தில் தங்கியிருந்து அனுஷ்டித்து வருகிறார்.

Story image

அப்போது வட மாநிலங்களில்  சாதுக்களுக்கும், சந்நியாசிகளுக்கும் சாலையோரம் தங்கியிருக்கும் பாம்பாட்டிகள் நாங்கள் பிடித்த பாம்பினை சாதுக்களுக்கு அணிவித்து மரியாதை செய்வது வழக்கம், அந்த வகையில் ஸ்ரீவில்லிபுத்தூர் ஜீயர் சுவாமிகளுக்கு கொடிய விஷமுள்ள கருநாகப் பாம்பினை அணிவித்து மரியாதை செய்தனர். சுவாமிகளும் அதனை ஏற்றுக் கொண்டு அவர்களுக்கு ஆசி வழங்கினார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.