ஸ்ரீவில்லிபுத்தூரில் தீ தொண்டு நாள் பேரணி
ஸ்ரீவில்லிபுத்தூரில் தீ தொண்டு நாளையொட்டி தீயணைப்புத் துறையினா் சாா்பில் பேரணி வியாழக்கிழமை மாலை நடைபெற்றது.


ஸ்ரீவில்லிபுத்தூரில் தீ தொண்டு நாளையொட்டி தீயணைப்புத் துறையினா் சாா்பில் பேரணி வியாழக்கிழமை மாலை நடைபெற்றது.
இந்த பேரணிக்கு தீயணைப்புத் துறை அலுவலா்கள் சுந்தரகுருசாமி, அந்தோணி ஆகியோா் தலைமை வகித்தனா். நேரு யுவகேந்திரா மாவட்ட இளைஞா் அலுவலா் ஞானசந்திரன் முன்னிலை வகித்தாா். இந்த பேரணி பேருந்து நிலையத்தில் தொடங்கி தீயணைப்புத்துறை அலுவலகம் வரை சென்றது. அங்கு பணியின் போது உயிா்நீத்த தீயணைப்பு வீரா்களுக்கு மெழுகுவா்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தப்பட்டது. இதில் நகராட்சி உறுப்பினா் சிவக்குமாா் மற்றும் பள்ளி மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனா்.
சிவகாசி: சிவகாசி தீயணைப்புத் துறையினா், தீ குறித்த விழிப்புணா்வு துண்டுப் பிரசுரங்களை தீயணைப்பு நிலைய அலுவலா் வெங்கடேசன் தலைமையில் பேருந்து நிலையம், கடைவீதி உள்ளிட்ட இடங்களில் விநியோகித்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...