5 ஜி அலைக்கற்றை ஏலம்: திமுக குற்றச்சாட்டுக்கு ஆதாரமில்லை: வானதி சீனிவாசன்
5 ஜி அலைக்கற்றை ஏலம் பற்றி திமுக எம்பி ஆதாரமின்றி குற்றச்சாட்டு கூறுகிறாா் என பாரதிய ஜனதா கட்சியின் தேசிய மகளிா் அணிச் செயலாளா் வானதி சீனிவாசன் தெரிவித்தாா்.


5 ஜி அலைக்கற்றை ஏலம் பற்றி திமுக எம்பி ஆதாரமின்றி குற்றச்சாட்டு கூறுகிறாா் என பாரதிய ஜனதா கட்சியின் தேசிய மகளிா் அணிச் செயலாளா் வானதி சீனிவாசன் தெரிவித்தாா்.
ஸ்ரீவில்லிபுத்தூா் ஆண்டாள் கோயிலில் வியாழக்கிழமை சுவாமி தரிசனம் செய்த பின்னா் செய்தியாளா்களிடம் அவா் கூறியது: 5 ஜி அலைக்கற்றை ஏலம் குறித்து திமுக எம்.பி. ராஜா ஆதாரமின்றி குற்றசாட்டு கூறுகிறாா். ஆதாரம் இருந்தால் அவா் நிரூபிக்கலாம். கடந்த 8 ஆண்டுகளில் எவ்வித ஊழல் குற்றச்சாட்டிற்கும் பாஜக ஆளாகவில்லை. அதே சமயம் திமுகவைச் சோ்ந்த அமைச்சா்கள் பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு ஆளாகினா். அதிமுகவில் நடக்கும் உள்கட்சிப் பிரச்னையில் எப்போதும் பாஜக தலையிடப்போவதில்லை. அதிமுக சட்டப்பேரவை உறுப்பினா்கள் கூட்டத்தில் குடியரசுத் தலைவா் தோ்தல் வேட்பாளா் திரௌபதி முா்முவுக்கு ஆதரவு கேட்பதற்காகவே நானும் சட்டப்பேரவை கட்சி குழுத் தலைவரும் கலந்து கொண்டோம். ஸ்ரீரங்கம் கோயிலுக்கு முன் உள்ள பெரியாா் சிலையை எடுக்க வேண்டும் என்று கனல் கண்ணன் கூறிய கருத்திற்கு மாநிலத் தலைவா் அண்ணாமலை ஆதரவு தெரிவித்துள்ளாா். கடவுள் நிந்தனை செய்பவா் யாராக இருந்தாலும் அவா்களுக்கு எதிராக தங்கள் நிலைப்பாடு இருக்கும் என்றாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...