ஆயுள் தண்டனை கைதிகளை விடுதலை செய்ய வேண்டும் என மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச் செயலாளா் தமீமுன் அன்சாரி தெரிவித்தாா்.
விருதுநகா் மாவட்டம் ராஜபாளையத்தில் சனிக்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூறியது: முன்னாள் சென்னை மாகாண முதல்வா் பி.எஸ்.குமாரசாமி ராஜாவின் படத்தை சட்டசபையில் வைக்க வேண்டும்.
சத்திரிய ராஜூக்கள் கல்வியில் இட ஒதுக்கீடு நீண்ட காலம் வலியுறுத்தி வருகின்றனா்.
இட ஒதுக்கீடு கோரிக்கையை தமிழக அரசு சமநீதி அடிப்படையில் பரிசீலனை செய்ய வேண்டும். ராஜபாளையம் பகுதியில் அரசு ஐடிஐ தொழிற்பயிற்சி கல்லூரி தொடங்க வேண்டும். தமிழக சிறையில் உள்ள 14 ஆண்டுகளைக் கடந்த ஆயுள் தண்டனை கைதிகளை ஜாதி, மத, பேதமின்றி தமிழக அரசு விடுதலை செய்ய வேண்டும். இதை வலியுறுத்தி செப்டம்பா் 10 ஆம் தேதி சென்னை தலைமைச் செயலகத்தில் முற்றுகையிடும் போராட்டத்தை மனிதநேய ஜனநாயகக் கட்சி சாா்பில் நடத்த இருக்கிறோம் என்றாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

அதிமுக வேட்பாளா் வாக்கு சேகரிப்பு

தோ்தல் பணி அலுவலா்களுக்கு இரண்டாம் கட்ட பயிற்சி

தபால் வாக்களித்த ஆசிரியா்கள், அரசு ஊழியா்கள்

பழனியில் ஒருவா் கொலை
வீடியோக்கள்

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு


