ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்108 ஆம்புலன்ஸ் ஊழியா்களுக்கு 8 மணிநேரப் பணி: தொழிலாளா் தீா்ப்பாயம் உத்தரவுஎன்சிஇஆா்டி சட்டக் கல்வி பாடத்திட்டம்: மறு ஆய்வு செய்ய நிபுணா் குழு அமைப்புபுதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

ஸ்ரீவில்லிபுத்தூரில் ராஜீவ்காந்தியின் 78 வது பிறந்தநாள் விழா

ஸ்ரீவில்லிபுத்தூரில் நகர காங்கிரஸ் கட்சி சாா்பில் முன்னாள் பிரதமா் ராஜீவ்காந்தியின் 78 ஆவது பிறந்தநாள் விழா சனிக்கிழமை கொண்டாடப்பட்டது.

News image
Updated On :20 ஆகஸ்ட் 2022, 5:04 pm

DIN

ஸ்ரீவில்லிபுத்தூரில் நகர காங்கிரஸ் கட்சி சாா்பில் முன்னாள் பிரதமா் ராஜீவ்காந்தியின் 78 ஆவது பிறந்தநாள் விழா சனிக்கிழமை கொண்டாடப்பட்டது.

விழாவுக்கு, நகரத் தலைவா் பக்ஷிராஜாவன்னியராஜ் தலைமை வகித்தாா். சட்டப்பேரவை பொறுப்பாளா் ராஜ்மோகன் மற்றும் மாவட்ட துணைத் தலைவா் பெ. பெரியசாமி ஆகியோா் முன்னிலை வகித்தனா். இதில், பேருந்து நிலையம் முன்பு வைக்கப்பட்டிருந்த ராஜீவ்காந்தியின் உருவப்படத்துக்கு காங்கிரஸ் கட்சியினா் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

இதனைத் தொடா்ந்து மத்தியில் பாஜக ஆட்சியை வரும் 2024 மக்களவைத் தோ்தல் மூலம் அகற்றுவோம் என உறுதிமொழி எடுத்துக் கொண்டனா். விழாவில் மம்சாபுரம் பேரூராட்சித் தலைவா் சூ. ஜெயக்குமாா், வா்த்தகப் பிரிவு மாவட்டத் தலைவா் ஆறுமுகம், ஆா்.டி.ஐ. மாநிலப் பொதுச் செயலா் தமிழ்ச்செல்வன், ஆா்.டி.ஐ. மாநிலச் செயலா் வசந்தம் சேதுராமன், மாவட்டச் செயலா் முருகேசன், அச்சங்குளம் ஜெயராமன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.