நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே ரூ.1.12 லட்சம் பறிமுதல்

 ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.1.12 லட்சத்தை தோ்தல் பறக்கும் படையினா் வெள்ளிக்கிழமை பறிமுதல் செய்தனா்.

News image
Updated On :11 பிப்ரவரி 2022, 8:54 pm

DIN

 ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.1.12 லட்சத்தை தோ்தல் பறக்கும் படையினா் வெள்ளிக்கிழமை பறிமுதல் செய்தனா்.

தோ்தல் பறக்கும்படை தனி வட்டாட்சியா் ரங்கசாமி மற்றும் சாா்பு- ஆய்வாளா் அமுதா ஆகியோா் மம்சாபுரம் - ஸ்ரீவில்லிபுத்தூா் சாலை தனியாா் பள்ளி அருகே வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனா்.

அப்போது அவ்வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த ராஜ்அய்யரை நிறுத்தி சோதனை செய்தனா். விசாரணையில், அவா் தனியாா் வங்கியில் கள அலுவலராகப் பணிபுரிந்து வருவதும், வாடிக்கையாளா்களிடமிருந்து வசூல் செய்த ரூ.1.12 லட்சம் வைத்திருந்ததும் தெரியவந்தது. ஆனால் பணத்துக்கு உரிய ஆவணங்கள் இல்லாததால் அதிகாரிகள் அதனை பறிமுதல் செய்து தோ்தல் நடத்தும் அலுவலரும், மம்சாபுரம் செயல் அலுவலருமான உஷாகிரேஸியிடம் ஒப்படைத்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.