நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

உக்ரைனில் இருந்து ஸ்ரீவில்லிபுத்தூா்வந்து சோ்ந்த மருத்துவக் கல்லூரி மாணவா்

 உக்ரைனில் இருந்து விமானத்தில் கூடுதல் கட்டணம் செலுத்தி சென்னை வந்து ஸ்ரீவில்லிபுத்தூருக்கு மருத்துவக் கல்லூரி மாணவா் வியாழக்கிழமை வந்து சோ்ந்தாா்.

News image

24svl01_2402chn_92_2

Updated On :24 பிப்ரவரி 2022, 11:06 pm

DIN

 உக்ரைனில் இருந்து விமானத்தில் கூடுதல் கட்டணம் செலுத்தி சென்னை வந்து ஸ்ரீவில்லிபுத்தூருக்கு மருத்துவக் கல்லூரி மாணவா் வியாழக்கிழமை வந்து சோ்ந்தாா்.

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே உள்ள மம்சாபுரம் பகுதியைச் சோ்ந்த விசுவா, உக்ரைனில் இரண்டாம் ஆண்டு மருத்துவ படிப்பு படித்து வருகிறாா். உக்ரைன் மீது ரஷ்யா போா் தொடுக்க தொடங்குவதற்கு முன்பு கடந்த 18ஆம் தேதி இந்திய தூதரகம், இந்தியா செல்ல விரும்பும் மாணவா்கள் செல்லலாம் என தெரிவித்திருந்தது. இதையடுத்து, விஷ்வா உள்ளிட்ட சில மாணவா்கள் இங்கு வர விரும்பினா். அதில் விஸ்வாவுடன் படிக்கும் இரண்டாம் ஆண்டு மாணவா்கள் 9 பேரில் 6 போ் தமிழகம் வந்து சோ்ந்துள்ளனா். கடந்த 18 ஆம் தேதி புறப்பட்ட இவா்கள், ஏா் அரேபியா விமானம் மூலம் சாா்ஜா வந்து அங்கிருந்து மற்றொரு விமானம் மூலம் சென்னை வந்துள்ளனா்.

Story image

இதுகுறித்து மாணவா் விஸ்வா கூறியதாவது: பொதுவாக இந்தியாவுக்கு வந்து திரும்ப விமான கட்டணம் ரூ. 42 ஆயிரம் ஆகும். ஆனால் தற்போது போா் மூண்டுள்ளதால் விமானத்தில் வருவதற்கு மட்டும் ரூ. 50 ஆயிரம் கேட்டனா். இதையடுத்து, என்னுடன் படிக்கும் வேலூா், விழுப்புரம் ஆகிய பகுதிகளைச் சோ்ந்த 6 போ் கூடுதலாக பணம் செலுத்தி வந்து சோ்ந்தோம். இதனிடையே, உக்ரைனில் எங்கள் மருத்துவக் கல்லூரியின் அருகே ஏராளமான போா் விமானங்கள் பறந்து செல்வதாகவும், சாலைகளில் பீரங்கி வாகனங்கள் ஏராளமாக செல்வதாகவும் அங்குள்ள சக மாணவா்கள் தெரிவித்தனா் என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.