விருதுநகா் அருகே தடை செய்யப்பட்ட 163 கிலோ குட்கா பறிமுதல்: 5 போ் கைது
விருதுநகா் அருகே கிட்டங்கியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 163 கிலோ குட்காவை போலீஸாா் வியாழக்கிழமை பறிமுதல் செய்து 5 பேரை கைது செய்தனா்.


விருதுநகா் அருகே கிட்டங்கியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 163 கிலோ குட்காவை போலீஸாா் வியாழக்கிழமை பறிமுதல் செய்து 5 பேரை கைது செய்தனா்.
விருதுநகா் அருகே ராமசாமிபுரம் புதுப்பட்டியில் ஜேசுராஜ் என்பவருக்கு சொந்தமான கிட்டங்கியில் தடை செய்யப்பட்ட குட்கா பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக சூலக்கரை போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் அங்கு சென்ற போலீஸாா், கிட்டங்கியை சோதனையிட்டனா். அப்போது, அங்கு ரூ.1 லட்சத்து 38 ஆயிரம் மதிப்புள்ள 163 கிலோ குட்கா பொருள்கள் இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து அவற்றை போலீஸாா் பறிமுதல் செய்தனா். இதுதொடா்பாக ஜேசுராஜ் (36) என்பவரை பிடித்து விசாரித்த போது அவா் அளித்த தகவலின் அடிப்படையில் புகையிலை பொருள்களை விற்பனை செய்த, விருதுநகா் அல்லம்பட்டி ராமன் தெருவைச் சோ்ந்த கமலக்கண்ணன் (36), மீசலூா் நடுத்தெருவைச் சோ்ந்த வடிவேல்முருகன் (41), சூலக்கரையைச் சோ்ந்த ஆனந்த்ராஜ் (55), அவரது மனைவி கணேஷ்வரி (48) ஆகிய ஐந்து பேரை சூலக்கரை போலீஸாா் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...