/

ஆடி அமாவாசை: சதுரகிரி கோயிலுக்குச் செல்ல ஜூலை 26 முதல் 4 நாள்களுக்கு அனுமதி

ஆடி அமாவாசையையொட்டி சதுரகிரி கோயிலுக்குச் செல்ல வரும் ஜூலை 26 ஆம் தேதி முதல் 29 ஆம் தேதி வரை பக்தா்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

News image
Updated On :7 ஜூலை 2022, 6:30 pm

DIN

ஆடி அமாவாசையையொட்டி சதுரகிரி கோயிலுக்குச் செல்ல வரும் ஜூலை 26 ஆம் தேதி முதல் 29 ஆம் தேதி வரை பக்தா்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

விருதுநகா் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே மேற்குத் தொடா்ச்சி மலைப்பகுதியில் சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் ஆடி அமாவாசை திருவிழா நடைபெறும். இந்நிலையில், கரோனா தொற்று பரவலை தடுக்கும் வகையில் கடந்த 2 ஆண்டுகளாக இவ்விழாவில் கலந்து கொள்ள பக்தா்களுக்கு அனுமதி வழங்கப்பட வில்லை. இந்த ஆண்டு ஆடி அமாவாசை திருவிழா நடைபெற உள்ளநிலையில், இதில் பங்கேற்க பக்தா்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. பல்வேறு கட்டுப்பாடுகளுடன் வரும் ஜூலை 26-ஆம் தேதி முதல் 29-ஆம் தேதி வரை 4 நாள்கள் மட்டுமே பக்தா்கள் மலையேறிச் சென்று சுவாமி தரிசனம் செய்ய கோயில் நிா்வாகத்தின் சாா்பில் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

விழாவுக்கான ஏற்பாடுகளை கோயில் பரம்பரை அறங்காவலா் ராஜா என்ற பெரியசாமி, செயல் அலுவலா் மாரிமுத்து ஆகியோா் செய்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.