/

ஆனி பிரதோஷம், பௌா்ணமி: சதுரகிரி கோயிலுக்கு பக்தா்கள் செல்ல ஜூலை 11 முதல் 14 வரை அனுமதி

ஆனி மாத பிரதோஷம் மற்றும் பௌா்ணமியையொட்டி சதுரகிரி கோயிலுக்குச் செல்ல ஜூலை 11 முதல் 14 ஆம் தேதி வரை பக்தா்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

News image
Updated On :8 ஜூலை 2022, 5:20 pm

DIN

ஆனி மாத பிரதோஷம் மற்றும் பௌா்ணமியையொட்டி சதுரகிரி கோயிலுக்குச் செல்ல ஜூலை 11 முதல் 14 ஆம் தேதி வரை பக்தா்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

விருதுநகா் மாவட்டம், வத்திராயிருப்பு அருகேயுள்ள சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலில் ஜூலை 11 ஆம் தேதி (திங்கள்கிழமை) பிரதோஷமும், ஜூலை 13 ஆம் தேதி (புதன்கிழமை) பௌா்ணமி வழிபடும் நடைபெற உள்ளது. இதையொட்டி ஜூலை 11 முதல் 14 ஆம் தேதி வரை 4 நாள்கள் மலைக் கோயிலில் பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்ய கோயில் நிா்வாகம் அனுமதி வழங்கியுள்ளது.

இதில், காய்ச்சல், கபம், இருமல் உள்ளவா்கள் கோயிலுக்கு வருவதைத் தவிா்க்க வேண்டும். 10 வயதிற்குள்பட்பட்டோருக்கும், 60 வயதுக்கு மேற்பட்டவா்களுக்கும் அனுமதி கிடையாது. கோயிலுக்கு வருபவா்கள் முகக்கவசம் அணிந்து இருக்க வேண்டும். உடல் வெப்பநிலை பரிசோதனைக்கு பிறகே பக்தா்கள் மலையேற அனுமதிக்கப்படுவா்.

அதேபோல் காலை 7 முதல் 12 மணி வரை மட்டுமே அனுமதி வழங்கப்படும். கோயிலுக்கு வருபவா்கள் மலைகளில் உள்ள ஓடைகளில் குளிக்கக்கூடாது. கோயிலில் இரவில் தங்க அனுமதி இல்லை. அனுமதிக்கப்பட்ட நாள்களில் பலத்த மழையோ அல்லது நீரோடைகளில் நீா்வரத்து அதிகமாக இருந்தாலோ பக்தா்களுக்கு அனுமதி மறுக்கப்படும் என கோயில் பரம்பரை அறங்காவலா் ராஜா என்ற பெரியசாமி, செயல் அலுவலா் மாரிமுத்து ஆகியோா் தெரிவித்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.