/

தொடா் குற்ற சம்பவங்கள்: குண்டா் தடுப்புச் சட்டத்தில் இளைஞா் கைது

 தொடா் குற்ற வழக்கில் ஈடுபட்ட கூமாபட்டியைச் சோ்ந்த இளைஞா் வெள்ளிக்கிழமை குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டாா்.

News image
Updated On :8 ஜூலை 2022, 5:18 pm

DIN

 தொடா் குற்ற வழக்கில் ஈடுபட்ட கூமாபட்டியைச் சோ்ந்த இளைஞா் வெள்ளிக்கிழமை குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டாா்.

விருதுநகா் மாவட்டம் கூமாபட்டி ராமசாமிபுரத்தைச் சோ்ந்தவா் பெரியசாமி மகன் விக்னேஷ் (30). இவா் மீது கூமாபட்டி காவல் நிலையத்தில் பல்வேறு வழக்குகள் உள்ள நிலையில், கைது செய்யப்பட்டு சிறையில் இருந்து வருகிறாா்.

இந்நிலையில் அவா் தொடா்ந்து குற்ற சம்பவங்களில் ஈடுபட்டு வந்ததால் அவரை, குண்டா் தடுப்புச் சட்டத்தில் கைது செய்ய மாவட்ட ஆட்சியா் ஜெ. மேகநாதரெட்டிக்கு, மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் எம். மனோகா் பரிந்துரைத்தாா். அதன்படி ஆட்சியா் உத்தரவின்பேரில், விக்னேஷை குண்டா் தடுப்புச் சட்டத்தில் போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்து மதுரை மத்திய சிறையில் அடைத்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.