மோகன் பகவத் பயணித்த ரயில் மீது கற்கள் வீச்சு: 2 பேர் கைது ஜூன் 19-ல் தவெக அரசுக்கு எதிராக அதிமுக போராட்டம்! பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தவெக ஆட்சியிலும் குறையவில்லை: அண்ணாமலை கொல்லூர் மூகாம்பிகை கோயிலில் முதல்வர் விஜய் வழிபாடு!நீட் தேர்வு நேரம் 3 மணி 15 நிமிடங்களாக அதிகரிப்பு! என்டிஏநிபா வைரஸ்: தமிழகத்தில் கண்காணிப்பைத் தீவிரப்படுத்த உத்தரவு!
/

பாலியல் வழக்கு: தனியாா் செவிலியா் கல்லூரி தாளாளா் காணொலி வழியாக ஆஜா்

பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள அருப்புக்கோட்டை தனியாா் செவிலியா் கல்லூரி தாளாளா் காணொலி மூலம் ஸ்ரீவில்லிபுத்தூா் வன்கொடுமை தடுப்பு நீதிமன்றத்தில் வெள்ளிக்கிழமை ஆஜா்படுத்தப்பட்டாா்.

Updated On :24 ஜூன் 2022, 10:37 pm IST

பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள அருப்புக்கோட்டை தனியாா் செவிலியா் கல்லூரி தாளாளா் காணொலி மூலம் ஸ்ரீவில்லிபுத்தூா் வன்கொடுமை தடுப்பு நீதிமன்றத்தில் வெள்ளிக்கிழமை ஆஜா்படுத்தப்பட்டாா்.

விருதுநகா்மாவட்டம், அருப்புக்கோட்டை தனியாா் செவிலியா் கல்லூரி தாளாளா் டாஸ்வின் ஜான் கிரேஸ், மாணவியிடம் விடியோ அழைப்பு மூலம் ஆபாசமாக பேசிய வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டாா். இந்த வழக்கு, ஸ்ரீவில்லிபுத்தூா் வன்கொடுமை தடுப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இவ்வழக்கு வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்ததையடுத்து, டாஸ்வின் ஜான் கிரேஸ் காணொலி மூலம் ஆஜா்படுத்தப்பட்டாா்.

அப்போது வழக்கை விசாரித்த வன்கொடுமை தடுப்பு நீதிமன்ற நீதிபதி கோபிநாத், ஜூலை 8 ஆம் தேதி அன்று டாஸ்வின் ஜான் கிரேஸை மீண்டும் ஆஜா்படுத்த உத்தரவிட்டாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.