தவெக தலைமையிலான கூட்டணியின் பெயர் செப். 9-ல் அறிவிப்புதவெக நிர்வாகி கொலை: துணை ஆணையர், ஆய்வாளர் காத்திருப்புப் பட்டியலுக்கு மாற்றம்கட்டட விபத்து மீட்புப் பணி! நேரில் ஆய்வு செய்த முதல்வர் ரேகா குப்தா!3 நாள்கள் அரசுப் பயணமாக இலங்கை செல்லும் ராஜ்நாத் சிங்!சொந்தத் தோல்விகளை மறைக்க எதிர்க்கட்சிகளுக்கு அடைமொழி: மோடியை விமர்சித்த கார்கே!

சாத்தூர் அருகே வெம்பக்கோட்டை அகழ்வாராய்ச்சியில் சுடுமண் புகை பிடிப்பான் கண்டுபிடிப்பு

சாத்தூர் அருகே வெம்பகோட்டை அகழ்வாராய்ச்சியில் சுடுமண் புகை பிடிப்பான் கண்டறியப்பட்டுள்ளது.

Published On :1 பிப்ரவரி 2024, 2:48 pm IST

சாத்தூர்: சாத்தூர் அருகே வெம்பக்கோட்டை அகழ்வாராய்ச்சியில் சுடுமண் புகை பிடிப்பான் கண்டறியப்பட்டுள்ளது.

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே வெம்பக்கோட்டை அருகே வைப்பற்றின் வடகரையில் அமைந்துள்ள உச்சிமேட்டில் 25 ஏக்கர் பரப்பளவிலான தொல்லியல் மேட்டில் கடந்த மார்ச் 16-ம் தேதி முதல் அகழ்வாராய்ச்சி பணிகள் நடைபெற்று வருகிறது. 

இந்த அகழாய்வில் முன்னதாக சுடுமண்ணால் ஆன  பகடைக்காய், தக்களி, ஆட்டக்காய்கள், முத்து மணிகள், சங்கு வளையல்கள், சுடு மண்ணால் செய்யப்பட்ட விளையாட்டுப் பொருட்கள், அழகிய வேலைப்பாடுகளுடன் கூடிய சுடு மண், அகல்விளக்கு, யானை தந்தால் செய்யப்பட்ட அணிகலன் மற்றும் பதக்கம், சுடுமண்ணால் ஆன தொங்கட்டான்,  2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட, காலத்தால் அழியாத கலை நயம் மிக்க கண்கவர் குவளை கண்டறியப்பட்டுள்ளது. 

இந்நிலையில் தற்பொழுது சுடுமண்ணால் ஆன புகைபிடிப்பான் கண்டறியப்பட்டுள்ளது. இதன் மூலம் அப்போதைய தொன்மையானவர்கள் புகைப்பிடிக்கும் பழக்கம் கொண்டுள்ளதை உறுதி செய்வதாக தொல்லியல் ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.