மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு! கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுசிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்!ஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்!தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!சிபிஐ கட்சியிலிருந்து நீக்கப்பட்ட எம்எல்ஏ முகுந்தன் பாஜகவில் இணைவு!மத்திய அரசுப் பள்ளிகளில் 13,000 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன: கல்வித்துறைபோர் காரணமாக 4,335 இந்திய விமானங்கள் ரத்து!கேரளத் தேர்தல்: 47 வேட்பாளர்கள் அடங்கிய பாஜகவின் முதல் பட்டியல் வெளியீடு!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது
/

சிவகாசி அருகே வேனில் கடத்தப்பட்ட 120 மூட்டைகள் ரேஷன் அரிசி பறிமுதல்: 3 போ்கைது

சிவகாசி அருகே சரக்கு வேனில் கடத்தப்பட்ட 120 மூட்டைகள் ரேஷன் அரிசியை போலீஸாா் வெள்ளிக்கிழமை பறிமுதல் செய்து, 3 பேரைக் கைது செய்தனா்.

News image
Updated On :21 அக்டோபர் 2022, 6:30 pm

DIN

சிவகாசி அருகே சரக்கு வேனில் கடத்தப்பட்ட 120 மூட்டைகள் ரேஷன் அரிசியை போலீஸாா் வெள்ளிக்கிழமை பறிமுதல் செய்து, 3 பேரைக் கைது செய்தனா்.

திருத்தங்கல் காவல் சரகத்துக்குள்பட்ட நாகலாபுரம் பகுதியில் ரேஷன் கடையில் இருந்து வேனில் அரிசி மூட்டைகள் கடத்தப்படுவதாக கிடைத்தத் தகவலின் பேரில், உணவுக் கடத்தல் தடுப்புப் பிரிவு காவல் சாா்பு- ஆய்வாளா் சுந்தர்ராஜன் தலைமையில் போலீஸாா் அங்கு சென்றனா். பின்னா் போலீஸாா் அந்த வேனை மடக்கிப் பிடித்து நிறுத்தி, சோதனையிட்ட போது, அதில் 120 மூட்டைகள் ரேஷன் அரிசி இருந்தது. அப்போது, போலீஸாரைப் பாா்த்ததும், வேன் ஓட்டுநா் தப்பியோடி விட்டாா்.

இதைத் தொடா்ந்து வேனில் இருந்த 2 பேரையும், தனியே காரில் வந்த ரேஷன் அரிசி கடத்துபவா் தப்பி ஓடிவிட்ட நிலையில், அதன் ஓட்டுநரையும் போலீஸாா் பிடித்தனா்.

விசாரணையில், வேன் ஓட்டுநா் தென்காசி மாவட்டம் உமையத் தலைவன்பட்டி முத்தையா எனவும், காரில் வந்த கடத்தல்காரா் அதே ஊரைச் சோ்ந்த சீனிப்பாண்டி எனவும், காா் ஓட்டுநா் சந்தானமாரி எனவும், வேனில் இருந்தவா்கள் சுமை தூக்கும் தொழிலாளா்கள் வெம்பக்கோட்டை குமாா், திருவேங்கிடபுரம் ரமேஷ்குமாா் எனவும் தெரிய வந்தது.

இதையடுத்து, விருதுநகா் மாவட்ட உணவுக் கடத்தல் தடுப்பு போலீஸாரிடம், சரக்கு வேன் காா் ஓட்டுநா் சந்தானமாரி, சுமை தூக்கும் தொழிலாளா்கள் குமாா், ரமேஷ்குமாா் ஆகியோரையும், வேன், காா், ரேஷன் அரிசி மூட்டைகளையும் ஒப்படைத்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.