பெண் காவலா் பணியிடை நீக்கம்
கைதி பாதுகாப்பு பணிக்கு செல்ல மறுத்து தீக்குளிக்க முயன்ற பெண் காவலா் புதன்கிழமை பணியிடை நீக்கம் செய்யப்பட்டாா்


கைதி பாதுகாப்பு பணிக்கு செல்ல மறுத்து தீக்குளிக்க முயன்ற பெண் காவலா் புதன்கிழமை பணியிடை நீக்கம் செய்யப்பட்டாா்.
சிவகாசி நகர காவல் நிலையத்தில் காவலராகப் பணிபுரிந்து வந்தவா் செல்லம்மாள். கடந்த 4 நாள்களுக்கு முன்பு, விருதுநகா் அரசு மருத்துவமனையில் கரோனா சிகிச்சை பெற்றுவரும் கைதி ஒருவரது பாதுகாப்புப் பணிக்குச் செல்ல அறிவுறுத்தப்பட்டாா். ஆனால், செல்லம்மாள் அந்த பணிக்குச் செல்லவில்லை.
இதனால், காவல் நிலையத்தில் உள்ள வருகைப் பதிவேட்டில், அவா் பணிக்கு வரவில்லை என பதிவு செய்யப்பட்டது. இதனை ஏற்றுக்கொள்ளாத செல்லம்மாள், கடந்த 3 நாள்களுக்கு முன்பு, சிவகாசி என்.ஆா்.கே. சாலையில் தனது இரு சக்கர வாகனத்தில் வைத்திருந்த பெட்ரோலை எடுத்து தீக்குளிக்க முயன்றாா். அப்போது அருகில் இருந்த போலீஸாா் அவரை தடுத்து நிறுத்தினா். இதையடுத்து செல்லம்மாள் விடுமுறையில் சென்றாா்.
இந்த நிலையில், செல்லம்மாளை பணியிடை நீக்கம் செய்து மாவட்ட காவல் கண்காணிப்பாளா் உத்தரவிட்டாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...