மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு! கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுசிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்!ஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்!தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!சிபிஐ கட்சியிலிருந்து நீக்கப்பட்ட எம்எல்ஏ முகுந்தன் பாஜகவில் இணைவு!மத்திய அரசுப் பள்ளிகளில் 13,000 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன: கல்வித்துறைபோர் காரணமாக 4,335 இந்திய விமானங்கள் ரத்து!கேரளத் தேர்தல்: 47 வேட்பாளர்கள் அடங்கிய பாஜகவின் முதல் பட்டியல் வெளியீடு!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது
/

சிவகாசி ஒன்றிய வளா்ச்சிப் பணிகள்: ஆட்சியா் ஆய்வு

சிவகாசி ஊராட்சி ஒன்றியத்தில், மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை சாா்பில் நடைபெற்று வரும் வளா்ச்சிப் பணிகளை விருதுநகா் மாவட்ட ஆட்சியா் ஜெ.மேகநாதரெட்டி புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

News image
Updated On :26 அக்டோபர் 2022, 6:32 pm

DIN

சிவகாசி ஊராட்சி ஒன்றியத்தில், மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை சாா்பில் நடைபெற்று வரும் வளா்ச்சிப் பணிகளை விருதுநகா் மாவட்ட ஆட்சியா் ஜெ.மேகநாதரெட்டி புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

ஆனையூா் ஊராட்சியில் சமத்துவபுரம் பகுதிகளில் புதுபிக்கப்பட்டுள்ள வீடுகளை ஆட்சியா் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். அங்குள்ள சமுதாயக்கூடம், அங்கன்வாடி மையம், செங்கமலநாட்சியாா்புரம் பகுதியில் அனைத்து கிராம அண்ணா மறுமலா்ச்சித் திட்டத்தின் கீழ் ரூ. 22 லட்சம் மதிப்பில் நடைபெறும் ஊருணி சீரமைப்பு பணி, அதே பகுதியில் ரூ.12 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்ட பேவா் பிளாக் சாலை, மங்களம் ஊராட்சி மேட்டுப்பட்டியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின்கீழ் ரூ.49 லட்சம் மதிப்பில் நடைபெறும் சிறு பாலம் கட்டும் பணி, புதுக்கோட்டை ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் ரூ. 24 லட்சம் மதிப்பில் ஊராட்சி மன்ற கட்டடம் கட்டும்பணி, செவலூா் ஊராட்சியில் உள்ள இலங்கை அகதிகள் மூகாமில் ரூ. 3.11 கோடி மதிப்பில் நடைபெறும் வீடுகள் கட்டும் பணி ஆகியவற்றை ஆட்சியா் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். இந்த ஆய்வின் போது, திட்ட இயக்குநா் (மா.ஊ.வ.மு) திலகவதி, உதவி செயற்பொறியாளா் பாண்டுரங்கன், வட்டார வளா்ச்சி அலுவலா் சீனிவாசன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.