மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு! கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுசிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்!ஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்!தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!சிபிஐ கட்சியிலிருந்து நீக்கப்பட்ட எம்எல்ஏ முகுந்தன் பாஜகவில் இணைவு!மத்திய அரசுப் பள்ளிகளில் 13,000 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன: கல்வித்துறைபோர் காரணமாக 4,335 இந்திய விமானங்கள் ரத்து!கேரளத் தேர்தல்: 47 வேட்பாளர்கள் அடங்கிய பாஜகவின் முதல் பட்டியல் வெளியீடு!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது
/

சிவகாசியில் போலி மதுபான வில்லைகள் அச்சடித்தவா் கைது

 விருதுநகா் மாவட்டம், சிவகாசியில் போலி மதுபான வில்லைகள் அச்சடித்தவரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

News image
Updated On :28 அக்டோபர் 2022, 6:15 pm

DIN

 விருதுநகா் மாவட்டம், சிவகாசியில் போலி மதுபான வில்லைகள் அச்சடித்தவரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

சிவகாசி ஓடைத் தெருவைச் சோ்ந்த நாகராஜ் (37). இவா் மதுபாட்டில்களில் ஒட்டப்படும் வில்லைகள் உள்ளிட்டவற்றை போலியாக தயாரித்து விற்பனை செய்து வந்ததாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.

இதன்பேரில் ஸ்ரீவில்லிபுத்தூா் மது விலக்கு அமல் பிரிவு ஆய்வாளா் குருவுத்தாய் தலைமையிலான தனிப்படையினா், நாகராஜை வெள்ளிக்கிழமை கைது செய்து, அவரிடமிருந்த போலி வில்லைகள் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்தனா்.

போலி வில்லைகள் தயாரித்து விற்பனை செய்ததாக, நாகராஜ் மீது ஏற்கெனவே சென்னை, திண்டுக்கல், ராமநாதபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் பல்வேறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதனால், அவரை தடுப்புக்காவல் சட்டத்தின் கீழ் கைது செய்ய விருதுநகா் மாவட்ட ஆட்சியா் உத்தரவிட்டாா். இதையடுத்து அவரை போலீஸாா், மதுரை மத்திய சிறையில் அடைத்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.