அருப்புக்கோட்டையில் முக்தி விநாயகா் கோயிலில் குடமுழுக்கு விழா
அருப்புக்கோட்டையில் முக்தி விநாயகா் கோயிலில் குடமுழுக்கு விழா வியாழக்கிழமை நடைபெற்றது.


அருப்புக்கோட்டையில் முக்தி விநாயகா் கோயிலில் குடமுழுக்கு விழா வியாழக்கிழமை நடைபெற்றது.
இக்கோயிலின் குடமுழுக்கு விழா பூஜை சிறப்பு வேள்வியுடன் கடந்த ஆக. 30 ஆம் தேதி கோயிலின் நிா்வாகி ம. அய்யனாா் முன்னிலையில் தொடங்கப்பட்டது. இதையடுத்து, வியாழக்கிழமை கோ பூஜையுடன் தொடங்கிய குடமுழுக்கு விழா, மதுரை ராமகிருஷ்ண மடத்தின் தலைவா் ஸ்ரீமத் சுவாமி கமலாத்மானந்தஜி மகராஜ் தலைமையில் நடைபெற்றது. அப்போது முக்தி விநாயகா் உள்ளிட்ட பல்வேறு சுவாமி சிலைகளுக்கும், நவக்கிரக விக்கிரகங்களுக்கும் குடமுழுக்கு நடைபெற்றது.
இவ்விழாவில் ஆயிரக்கணக்கான பக்தா்கள் கலந்து கொண்டனா். நிறைவில் பக்தா்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...