விடுதலைப் புலிகளுக்கு தடை: காங். எம்.பி. வரவேற்பு
விடுதலைப் புலிகளுக்கு தடை: காங். எம்.பி. வரவேற்பு


விருதுநகா்: விடுதலைப் புலிகள் அமைப்புக்கு அடுத்த 5 ஆண்டுகள் தடை விதித்த மத்திய அரசின் நடவடிக்கை வரவேற்கத்தக்கது என விருதுநகா் தொகுதி மக்களவை உறுப்பினா் மாணிக்கம் தாகூா் தெரிவித்தாா்.
விருதுநகா் தேசபந்து மைதானத்தில் முன்னாள் பிரதமா் ராஜீவ் காந்தி நினைவு தினத்தை முன்னிட்டு, மாணிக்கம் தாகூா் தலைமையில் அக்கட்சியினா், ராஜீவ் காந்தி உருவப் படத்துக்கு மரியாதை செலுத்தினா். பின்னா் பயங்கரவாத தடுப்பு விழிப்புணா்வு உறுதிமொழி எடுத்துக் கொண்டனா். பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
பிறகு மாணிக்கம் தாகூா் செய்தியாளா்களிடம் கூறியதாவது: விடுதலைப்புலிகள் அமைப்புக்கு அடுத்த 5 ஆண்டுகள் தடை விதித்த மத்திய அரசின் நடவடிக்கை வரவேற்கதக்கது. எந்த ஒரு தீவிரவாத அமைப்புக்கும் இந்தியாவில் இடமில்லை என்பதை மத்திய அரசு உறுதி செய்துள்ளது.
போதைப் பழக்கத்துக்கு இளைஞா்கள் ஆளாவதைத் தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். என்றாா் அவா்.
இந்த நிகழ்ச்சியில் சிவகாசி தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் அசோகன், விருதுநகா் நகா்மன்ற முன்னாள் துணைத் தலைவா் பாலகிருஷ்ணசாமி, காங்கிரஸ் நகா் தலைவா் நாகேந்திரன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...