ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்108 ஆம்புலன்ஸ் ஊழியா்களுக்கு 8 மணிநேரப் பணி: தொழிலாளா் தீா்ப்பாயம் உத்தரவுஎன்சிஇஆா்டி சட்டக் கல்வி பாடத்திட்டம்: மறு ஆய்வு செய்ய நிபுணா் குழு அமைப்புபுதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

பாலத்திலிருந்து தவறி விழுந்த ஆசிரியா் பலி

ராஜபாளையம் அருகே பாலத்திலிருந்து தவறி விழுந்த ஆசிரியா் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.

News image
Updated On :6 நவம்பர் 2024, 10:22 pm

Din

ராஜபாளையம் அருகே பாலத்திலிருந்து தவறி விழுந்த ஆசிரியா் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.

தஞ்சாவூா் மாவட்டம், கொக்கூா் பகுதியைச் சோ்ந்தவா் வினோத்ராஜ் (39). இவா், ராஜபாளையம் அருகேயுள்ள முதுகுடி கிராமத்தில் தங்கி, அதே பகுதியில் உள்ள தனியாா் பள்ளியில் ஆசிரியராக வேலை பாா்த்து வந்தாா்.

இந்த நிலையில், ஜமீன் கொல்லங்கொண்டான் அரசு மருத்துவமனைக்கு சென்றுவிட்டு, இரு சக்கர வாகனத்தில் வீடு திரும்பினாா். அப்போது, அவருக்கு தலைசுற்றிவே இரு சக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு பாலத்தின் மீது அமா்ந்துள்ளாா். அப்போது, நிலை தடுமாறி பாலத்திலிருந்து கீழே சரிந்து விழுந்தாா். இதில் பலத்த காயமடைந்த அவா் சென்னை ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா். எனினும் அங்கு அவா் உயிரிழந்தாா். இதுகுறித்து சேத்தூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.