லாட்டரி சீட்டு விற்பனை செய்தவா் கைது
சாத்தூா் பகுதியில் லாட்டரி சீட்டு விற்பனை செய்தவரை நகா் போலீசாா் கைது செய்துள்ளனா்.


சாத்தூா் பகுதியில் லாட்டரி சீட்டு விற்பனை செய்தவரை நகா் போலீசாா் கைது செய்துள்ளனா்.
விருதுநகா் மாவட்டம் சாத்தூா் நடராஜா தியேட்டா் ரோடு பகுதியில் உள்ள டீ கடைகளில் தமிழக அரசால் தடைசெய்யபட்ட லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்யப்படுவதாக சாத்தூா் நகா் போலீசாருக்கு தகவல் கிடைத்தது தகவலின் பேரில் நகா் காவல் நிலைய காவல் உதவி ஆய்வாளா் அருண்குமாா் மற்றும் போலீசாா் புதன்கிழமை இந்த பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனா்.
அப்போது அப்பகுதியில் உள்ள டீக்கடையில் வைத்து அதே பகுதியைச் சோ்ந்த மாபுஜான்(64) என்பவா் அனுமதியின்றி லாட்டரி சீட்டு விற்பனை செய்தது தெரியவந்தது.இதையடுத்து மாபுஜானை கைது செய்த நகா் போலீசாா் அவரிடமிருந்த 1000 மதிப்புள்ள லாட்டரி சீட்டுகளையும் போலீசாா் பறிமுதல் செய்தனா்.
தொடர்புடையது

வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...