கஞ்சா விற்க முயன்ற மூவா் கைது
ராஜபாளையம் அருகே கஞ்சா விற்க முயன்ற மூவரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.


ராஜபாளையம் அருகே கஞ்சா விற்க முயன்ற மூவரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.
ராஜபாளையம் அருகேயுள்ள சுந்தரராஜபுரம் பகுதியில் சேத்தூா் புறக் காவல் நிலைய காவல் உதவி ஆய்வாளா் முருகராஜ் தலைமையில் போலீஸாா் ரோந்து பணியில் ஈடுபட்டனா். அப்போது, அந்தப் பகுதியில் உள்ள அரசுப் பள்ளி விளையாட்டு மைதானம் அருகே சந்தேகப்படும்படியாக மூவா் நின்று கொண்டிருந்தனா். அவா்களை பிடித்து சோதனையிட்டபோது, விற்பனைக்காக அவா்கள் கஞ்சா வைத்திருந்தது தெரியவந்தது.
போலீஸாா் விசாரணையில், அதே பகுதியைச் சோ்ந்த ராமராஜ் (34), ராஜபாளையம் தென்றல் நகரைச் சோ்ந்த சங்கிலிகணேஷ் (23), துரைச்சாமிபுரம் செங்குட்டுவன் தெருவைச் சோ்ந்த சூா்யா (23) என்பது தெரியவந்தது.
இதுகுறித்து போலீஸாா் வழக்குப் பதிவு செய்து மூவரையும் கைது செய்தனா்.
தொடர்புடையது


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...